திமுக கூட்டணியை விடுங்க.. உங்க கட்சி உடையாம பார்த்துக்கோங்க.. எடப்பாடி பழனிசாமிக்கு கனிமொழி ரிப்ளை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக கூட்டணி உடைகிறதா எனப் பார்த்துக் கொண்டிருப்பதை விட தங்களது கட்சி உடையாமல் இருப்பதை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பார்த்துக்கொள்ள வேண்டும் என திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார். மேலும் பிரதமரின் மணிப்பூர் பயணம் குறித்தும் கனிமொழி விமர்சித்துள்ளார்.

திமுக எம்.பி கனிமொழி பேசுகையில், "திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என பத்திரிகைகளை படிக்காத சிலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். முன்னாள் முதலமைச்சராக இருந்தவர், என்னென்ன முதலீடு வந்தது என ஒரு அறிக்கை கொடுக்க வேண்டும் என்கிறார். நீங்கள் உங்கள் ஆட்சியில் நிறைய முதலீடுகளை ஈர்த்ததாக சொல்கிறீர்களே அது தொடர்பாக முதலில் அறிக்கை கொடுங்கள். வெறும் 2 பேரை சொல்லுங்கள் போதும்.

Kanimozhi Tells EPS Focus on Saving AIADMK from Splitting Instead of Hoping for DMK Alliance Rift

4 வருடங்களாக தமிழ்நாட்டுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தூங்கப்போய்விட்டு, இப்போது தேர்தல் வருகிறது என்றதும் தூங்கி எழுந்து மக்களைப் பார்க்க வருகிறார்கள். சுற்றுப்பயணம் செய்கிறார்கள். மக்களுக்கு அவர்கள் யார் என்றே மறந்துவிட்டது. மக்கள் மறப்பதை விடுங்கள், அவர்களது கட்சிக்காரர்களே மறந்துவிட்டார்கள். அதனால் அக்கட்சியில் பல குழப்பங்கள்.

தமிழ்நாட்டின் பிரச்சனைகளுக்காக நாங்கள் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். கூட்டணியிலேயே இருந்துகொண்டு தமிழ்நாட்டுக்கு எதிரான செயல்பாடுகளைச் செய்துகொண்டு, கவலையே இல்லாமல் மக்கள் பிரச்சனைகளுக்காக எந்தக் குரலும் கொடுக்காமல் இருந்து வருகிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.

திமுக கூட்டணி உடைந்துவிடும் எனப் பேசிக் கொண்டிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. திமுக கூட்டணி உடைகிறதா எனப் பார்த்துக் கொண்டிருப்பதை விட தங்களது கட்சி உடையாமல் இருப்பதை எடப்பாடி பழனிசாமி பார்த்துக்கொள்ள வேண்டும்" என கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.

மேலும், பிரதமர் மோடியின் மணிப்பூர் பயணம் பற்றி, "இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மாநிலம் பற்றி எரிந்து கொண்டிருந்தது. பிரதமர் இறுதியாக மணிப்பூருக்குச் செல்ல முடிவு செய்துள்ளார். மணிப்பூருக்குச் செல்ல வேண்டும் என்பதை அவருக்கு நினைவூட்டுவதில் மனிதாபிமானம் தோற்றுவிட்டது. 2027 மணிப்பூர் தேர்தல் ஏற்பாடுகள் அதில் வெற்றி பெற்றுவிட்டது." என கனிமொழி தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+