பள்ளிக் கல்வித்துறையில் முக்கிய பொறுப்புகளில் அதிகாரிகள் மாற்றம்.. பறந்த உத்தரவு
சென்னை: கடந்த ஆண்டு ஜூன் மாதம் பள்ளி கல்வித்துறை இயக்குனராக அறிவொளி நியமனம் செய்யப்பட்டார். அவர் பதவியேற்று சரியாக ஓராண்டு நிறைவடைந்துள்ளது. தற்போது அவரது பணி ஓய்வு பெற இருப்பதையடுத்து, பள்ளிக் கல்வித்துறையின் புதிய இயக்குனராக கண்ணப்பன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசு இன்று பிறப்பித்துள்ளது.
நிர்வாக காரணங்களுக்காக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள உயர் அதிகாரிகள் அவ்வப்போது இடமாற்றம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், தற்போது பள்ளி கல்வித்துறையில் முக்கிய பொறுப்புகளில் அதிகாரிகள் மாற்றம் செய்யபட்டுள்ளனர். இது குறித்த விவரம் வருமாறு; தொடக்க கல்வி இயக்குனராக இருந்த கண்ணப்பன் பள்ளிக் கல்வி இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளர்.

பள்ளிக் கல்வித்துறை இயக்குனராக உள்ள அறிவொளி நாளையுடன் ஓய்வு பெற உள்ளதை அடுத்து கண்னன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல அரசு தேர்வுகள் இயக்குனர் சேதுராமவர்மா தொடக்க கல்வி இயக்குனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மாநில கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி இயக்குனர் லலிதாவிற்கு அரசு தேர்வுகள் இயக்குனராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறையின் கரூர், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களின் முதன்மை கல்வி அலுவலர்கள் வயது முதிர்வு காரணமாக நாளை பணி ஓய்வு பெறுகிறார்கள். இதன்காரணமாக, திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியாவுக்கு, கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக கூடுதல் பொறுப்பும், நாகை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாசினிக்கு, மயிலாடுதுறை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக கூடுதல் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகனுக்கு, கடலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுலராகவும் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications