ஓஹோ.. சிவசங்கரை டக்கென ஓகே செய்த ஸ்டாலின்.. "இது"தான் காரணமா.. அப்ப ராஜ கண்ணப்பன் முடிவு என்ன?
சிவசங்கருக்கு ஸ்டாலின் போக்குவரத்து இலாகா ஒதுக்க என்ன காரணம்
சென்னை: ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்ற பிறகு சுமார் 10 மாதங்கள் கழித்து முதன்முறையாக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றால் கவனிக்கப்பட வேண்டிய விஷயமாக உள்ளது.. அதேசமயம், வேறு துறையில் அமைச்சராக இருப்பவரை, இன்னொரு இலாகாவுக்கு முதல்வரால் திடுதிப்பென்று மாற்றப்படுகிறார் என்றால், அதில் விஷயம் இல்லாமல் இருக்காது.. யார் இந்த அமைச்சர் சிவசங்கர்?!
திமுக ஆட்சி அமைந்ததில் இருந்து 2 விஷயங்கள் தொடர்ந்து கிசுகிசுக்கப்பட்டு வந்தன.. ஒன்று அமைச்சரவை மாற்றம், மற்றொன்று கண்ணப்பன் மீது நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்பு..
இதற்கு காரணம், ஆரம்பத்தில் திமுக சீனியர் அமைச்சர்கள் மீது சில சர்ச்சைகள் எழுந்தன.. புகார்கள் அறிவாலயத்துக்கு பறந்தன.. பேட்டிகளை தரும்போது எதையாவது வாய்விட்டு உளறி கொட்டுவது, அல்லது சர்ச்சை வார்த்தைகளை பயன்படுத்துவது போன்றவைகளில் சீனியர் அமைச்சர்கள் ஒருசிலர் ஈடுபட்டு வந்ததாக செய்திகளும் வந்து கொண்டே இருந்தன.

திமுக அமைச்சரவை
அதனால்தான், அமைச்சரவை மாற்றியமைக்கப்படலாம் என்ற பேச்சு, திமுக ஆட்சி அமைத்த காலத்திலேயே ஆரம்பமானது.. ஆனால், இவ்வளவு சீக்கிரம் அமைச்சரவையை மாற்றினால் அது, ஆட்சிக்கும் கட்சிக்கும் அழகல்ல என்பதை முதல்வர் நன்கு உணர்ந்திருந்தார்.. மேலும், சீனியர்கள் என்பதால் அவர்களின் பதவியை பறிக்காமல், இலாக்காக்களை வேண்டுமானால் குறைக்க யோசித்தும் வந்ததாக கூறப்பட்டது. இப்படிப்பட்ட சூழலில்தான், ராஜகண்ணப்பனின் விவகாரம் ஒவ்வொன்றாக வெளிவர துவங்கியது.

திருமாவளவன்
திருமாவளவனுக்கு ஏன் நாற்காலி தரவில்லை, பிளாஸ்டிக் சேரில் உட்கார வைக்கப்பட்டபோதே கண்ணப்பனின் மீதான பார்வை குவிய தொடங்கியது.. கண்ணப்பனை மட்டுமல்ல, இதுதான் உங்கள் சுயமரியாதையா? என்று திருமாவையும் சேர்த்துதான் நடுநிலையாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.. இரு தரப்பிலுமே விளக்கங்கள் தரப்பட்டன.. விஷயம் அதற்கு மேல் பெரிதாக்கப்படவில்லை.. ஆனால், கண்ணப்பன் செய்தது தவறு என்ற கோணம், மக்களிடம் தங்கிவிட்டது..

ராஜகண்ணப்பன்
ஜெயலலிதா காலத்தில் முக்கிய பதவியை வகித்தவர் ராஜகண்ணப்பன்.. கட்சியில் சீனியர்.. போக்குவரத்து துறை என்றாலே கண்ணப்பன் என்ற பெயரை அந்த காலத்திலேயே பெற்றவர்.. யாதவர்களின் நம்பிக்கை நட்சத்திரம்.. இவரா சாதியை சொல்லி அதிகாரியை திட்டினார் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.. திராவிட மாடல் வளர்ச்சி, சமூக நீதி என்று தினந்தோறும் ஓயாமல் முதல்வர் சொல்லி கொண்டிருக்கும்போது, எப்படி அமைச்சரால் இந்த வார்த்தையை சொல்ல முடிந்தது என்ற ஆச்சரிய கேள்வியும் எழுந்தபடியேதான் உள்ளது..

அமைச்சர் பதவி
இப்போது இலாகா மாற்றப்பட்டுள்ளது.. பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார்.. போக்குவரத்து துறையை விட குறைவான பதவி இது.. இத்தனை காலமும் கெத்தாக இருந்துவிட்டு, இப்படி இலாகா குறைவான துறையை அவர் ஏற்பாரா தெரியவில்லை.. ஒருவேளை மறுபடியும் கட்சியைவிட்டே வெளியேறி அதிமுகவில் இணைந்துவிடவும் வாய்ப்புள்ளது என்று இப்போதே சிலர் முணுமுணுக்க ஆரம்பித்துவிட்டனர்.

போக்குவரத்து துறை
மற்றொருபக்கம், போக்குவரத்து துறையில், அமைச்சர் எஸ்எஸ் சிவசங்கரை முதல்வர் உடனே அறிவித்தார்.. இதற்கு என்ன காரணமாக இருக்கும் என்ற லேசான சந்தேகமும் பரவலாக எழுந்துள்ளது.. முதலில் சிவசங்கர் ஒரு எளிமைவாதி.. முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவுக்கு நெருக்கமானவர் என்று அறியப்படுபவர்.. மிக சிறந்த எழுத்தாளர்.. இவர் ஃபேஸ்புக் பதிவுக்கு பல்லாயிரக்கணக்கான வாசகர்கள் உண்டு.. எல்லாவற்றிற்கும் மேலாக உதயநிதியின் மனசை வெகு எளிதாக தொட்டவர்..!

உதயநிதி
உதயநிதியின் பிறந்தநாளுக்கு முந்தைய நாள், அமைச்சர் அன்பில் மகேஷ், செய்தியாளர்களிடம், உதயநிதி ஸ்டாலின் விரைவில் அமைச்சராக வேண்டும் என்று தன் விருப்பத்தை கூறினார்.. நெருங்கிய நண்பர் என்பதால் அன்பில் மகேஷ் இப்படி சொல்கிறார் என்று கருதப்பட்டாலும், அன்பின் மகேஷின் விருப்பத்தை, ஆன் தி ஸ்பாட் வழிமொழிந்தவர் சிவசங்கர்தான்.. இதனால் உதயநிதியே குளிர்ந்து போனார்.. அதனாலேயே இப்படி ஒரு புரமோஷன் பொறுப்பை முதல்வர் தந்திருப்பதாக தெரிகிறது.. ஆக மொத்தம் சிவசங்கர் பொருத்தமான சாய்ஸ் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது..!
-
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா?












Click it and Unblock the Notifications