கன்னி ஏப்ரல் மாத ராசி பலன் 2021: குடும்பத்தில் சந்தோஷம் குழந்தைகளால் உற்சாகம்
சென்னை: அதிசார குரு பெயர்ச்சியும் குருவின் பார்வையும் ஏப்ரல் மாதத்தில் கன்னி ராசிக்காரர்களுக்கு மனதில் மகிழ்ச்சியை அதிகரிக்கப் போகிறது. நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும். ஏப்ரல் மாதம் கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் நவகிரகங்களின் நாயகன் சூரியன் மீன ராசியில் பயணிக்கிறார் உச்சம் பெற்ற சுக்கிரன், நீசம் பெற்ற புதன் ரிஷபத்தில் செவ்வாய் ராகு, விருச்சிகத்தில் கேது, மகரத்தில் சனி, குரு, என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. ஏப்ரல் மாதம் கன்னி ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் குழந்தைகளால் சந்தோஷம் நிறைந்த மாதமாக மாறப்போகிறது.
ஏப்ரல் மாதத்தில் கிரக பெயர்ச்சியைப் பார்த்தால் சூரியன் மீன ராசியில் இருந்து 14ஆம் தேதி மேஷ ராசிக்கு சென்று உச்சமடைகிறார். உச்சம் பெற்ற சூரியனின் பார்வை துலா ராசியின் மீது விழுகிறது. சுக்கிரனும் மேஷ ராசியில் பயணிக்கிறார். புதன் நீசம் பெற்று சஞ்சரிப்பார். 16ஆம் தேதி புதன் மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சியாகிறார். 30ஆம் தேதி ரிஷப ராசிக்கு மாறுகிறார்.
குரு பகவான் ஏப்ரல் 5ஆம் தேதி மகர ராசியில் இருந்து அதிசார பெயர்ச்சியாகி கும்ப ராசிக்கு செல்கிறார். ராகு உடன் இணைந்துள்ள செவ்வாய் ரிஷப ராசியில் இருந்து 13ஆம் தேதி மிதுன ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். இந்த மாதத்தில் கிரகங்களின் இடமாற்றம் அதிகம் உள்ளது. இந்த கிரகங்களின் சஞ்சாரம் மாற்றத்தின்படி கன்னி ராசிக்கு ஏப்ரல் மாதம் பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

வேலையில் மாற்றங்கள்
புதன் பகவானை ராசி நாதனாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களே, இந்த ஏப்ரல் மாதத்தில் உங்கள் ராசி நாதன் புதன் நீசமடைந்திருந்தாலும் ஏழாம் வீட்டில் உச்சம் பெற்ற சுக்கிரன், சூரியனுடன் இணைந்திருக்கிறார். குரு ஆறாம் வீட்டிற்கு செல்வதால் வேலை மாற்றம் கிடைக்கும். நல்ல சம்பளத்துடன் புது வேலை கிடைக்கும். இடமாற்றங்கள் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம். புதிய பொறுப்புகள் தேடி வரும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை அவசியம்.

குடும்பத்தில் குதூகலம்
நீண்ட நாட்களுக்கு முன்பு கடனாக கொடுத்த பணம் வராது நினைத்த பணம் வீடு தேடி வந்து சந்தோஷத்தை தரும். கணவன் மனைவிக்குள் இருந்த பிரச்சினைகள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும். குழந்தைகளால் குதூகலம் அதிகரிக்கும். பிள்ளைகளின் திருமண விசயமாக பேசி நல்ல முடிவு செய்யலாம்.

வியாபாரத்தில் லாபம்
தொழில் வியாபாரத்தில் இருந்த தேக்கநிலை மாறும், சரக்குகள் விற்று தீர்ந்து லாபம் அதிகரிக்கும். சுப செலவுகளும் வரும். வேலை செய்யும் இடத்தில் தேவையற்ற வீண் வாக்குவாதங்களை தவிர்த்து விடவும். உடன் வேலை செய்பவர்களிடம் அனுசரித்து செல்லவும். உறவினர்கள் நண்பர்களுடன் சின்னச் சின்ன மனஸ்தாபங்கள் வரலாம் வீண் பேச்சுக்களை தவிர்த்து விட்டுக்கொடுத்து செல்வது காரிய வெற்றிக்கு உதவும்.

கிரக பெயர்ச்சி கவனம்
சூரியன் மாத பிற்பகுதியில் எட்டாம் வீட்டிற்கு சென்று உச்சமடைகிறார். கூடவே ராசிநாதனும், சுக்கிரனும் 8ஆம் வீட்டில் பயணம் செய்கிறார். பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். விலை உயர்ந்த பொருட்கள், பணம் நகைகளை பத்திரப்படுத்துங்கள். குல தெய்வ வழிபாடு நன்மையை ஏற்படுத்தும். விநாயகர் வழிபாடு மனதிற்கு நிம்மதியை கொடுக்கும். இந்த மாதம் ஒருமுறை ஸ்ரீரங்கம் சென்று ரங்கநாயகித்தாயாருக்கு வெள்ளிக்கிழமை விளக்கேற்றி வழிபட நன்மைகள் நடைபெறும்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications