ஓபிஎஸ் மகனால் சீரழிந்த பிரபல இயக்குநர் குடும்பம்-மனைவியை டைவர்ஸ் செய்த பின்னணி:காயத்ரி தேவி பரபரப்பு
சென்னை: பிரபல இரண்டெழுத்து திரைப்பட இயக்குநர் மனைவியை டைவர்ஸ் செய்ய காரணமே ஓபிஎஸ் மகனுடைய தொடர்புதான் என சிவகங்கை காயத்ரிதேவி அளித்த பேட்டியில் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.
சிவகங்கை காரைக்குடியைச் சேர்ந்த காயத்ரிதேவி என்பவர் சென்னையில் டிஜிபி அலுவலகத்தில் நேற்று புகார் அளித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய காயத்ரி தேவி, திருமணமாகி விவகாரத்து பெற்றுவிட்டேன். இதன்பின்னர் வாட்ஸ் அப் வீடியோ காலில் வந்து என்னிடம் ஆபாசமாக ஓ.பி.ரவீந்திரநாத் பேசினார்; திருமணம் செய்து கொள்வதாக கூறி தகாத முறையில் பேசினார்.. என பல குற்றச்சாட்டுகளை அடுக்கினார். இதற்கான ஆதாரங்கள் என செய்தியாளர்களிடமும் சிலவற்றை வெளியிட்டார்.
அத்துடன் பிரபல இரண்டெழுத்து டைரக்டரின் மாஜி மனைவி தொடர்பாகவும் காயத்ரி தேவி தமது செய்தியாளர் சந்திப்பில் குண்டு வீசுவதுபோல ஒரு தகவலை விவரித்தார். இதோ அவரது வார்த்தைகளில் இருந்து.. "அந்த இரண்டெழுத்து பிரபல டைரக்டரின் மனைவிக்கும் ஓ.பி. ரவீந்திரநாத்துக்கும் இடையே 7 வருடங்களாக கள்ளத் தொடர்பு இருந்தது. இத்தொடர்பால் மனக்கசப்பாகி, அந்த பிரபல டைரக்டர் மனைவியையே டைவர்ஸ் செய்தார். இது அனைவருக்குமே தெரியும். ரவீந்திரநாத்தின் செயலை சுட்டிக்காட்டவே இதைச் சொல்கிறேன். மற்றபடி இயக்குநரின் முன்னாள் மனைவிக்கும் நான் கொடுத்த வழக்கிற்கும் தொடர்பு இல்லை. அந்த பெண்ணால் எனக்கு எந்த தொந்தரவும் இல்லை.
இதில் கொடுமை என்ன வென்றால், அந்த பிரபல டைரக்டரின் முன்னாள் மனைவி, ஓ.பி.ரவீந்திரநாத்தின் மனைவியின் தோழி. இந்த பழக்கத்தில்தான் அந்த பெண்ணை கவர்ந்தார். இப்படித்தான் குடும்ப பெண்கள் தான் கூப்பிட்டால் வந்துவிடுவார் என ரவீந்திரநாத் நினைத்து என்னையும் அணுகுகிறார். எல்லா பெண்களும் அப்படியானவர்கள் கிடையாது" இவ்வாறு காயத்ரி தேவி குறிப்பிட்டார்.
மேலும், இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்திடம் நான் கூறியபோது, அம்மா இறந்த திதி கொடுக்கக் கூட ரவீந்திரநாத் வரவில்லை. அவர் தாங்கள் சொல்லும் பேச்சை கேட்கும் நிலையிலும் இல்லை என வேதனையுடன் தெரிவித்தார் எனவும் காரைக்குடி காயத்ரி தேவி தெரிவித்தார்.
காயத்ரி தேவி குறிப்பிட்ட இயக்குநர், 1990களில் திடீரென வெகு பிரபலமாக உருவெடுத்தவராகும். "வி" என்ற எழுத்தில் தொடங்கும் பெயர் கொண்ட நான்கெழுத்து நடிகருக்கு பெரும் பிரேக் கொடுத்த படத்தை இயக்கி அவரை பெரிய அளவுக்கு ஃபேமஸ் ஆகச் செய்தவர். சமீப காலமாக அவரது படங்கள் சரியாக ஓடவில்லை என்றபோதிலும், தமிழ் திரையுலகின் பெயர் சொல்லும் படங்களில் சிலவற்றை படைத்த படைப்பாளி அவர் என்பது குறிப்பிடத்தக்கது.
காயத்ரி தேவியின் இந்த குற்றச்சாட்டுக்கு ரவீந்திரநாத் அல்லது ஓபிஎஸ் ஆகியோர் இதுவரை எந்த மறுப்போ பதிலோ தெரிவிக்கவில்லை.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications