நான் அதிமுக கூட்டணி தான்.. ஆனால் காரைக்குடியில் சீமானை ஜெயிக்க வையுங்க மக்களே! ஆர்கே சுரேஷ் வீடியோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: ''காரைக்குடி மக்களே விட்றாதீங்க.. நான் அதிமுக - பாஜக கூட்டணியில் இருக்கிறேன். நான் அவங்களுக்கு தான் சப்போர்ட் பண்ணுகிறேன். ஆனால் ஒரு தமிழனாக காரைக்குடியில் சீமான் வெற்றி பெற வேண்டும். தமிழ் தேசியத்தின் மகனாக அவரை எனக்கு பிடிக்கும். அவர் 15 ஆண்டுகளாக போராடி வருகிறார். அவருக்கு ஓட்டுப்போட வேண்டும் என்று நான் கோரிக்கை வைக்கிறேன். தயவுசெய்து அவருக்காக ஓட்டுப்போடுங்கள்'' என நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்கே சுரேஷ் வீடியோ வெளியிட்டுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருக்கும் சீமான் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டசபை தொகுதியில் போட்டியிடுகிறார். சிவகங்கை அவரது சொந்த மாவட்டம் என்பதால் எப்படியாவது வெற்றி பெற்று விடலாம் என்ற நம்பிக்கையில் சீமான் இருக்கிறார்.

karaikudi-voters-should-cast-their-votes-to-seeman-rk-suresh-release-video

இன்று தான் பிரசாரத்துக்கு கடைசி நாள். மாலை 6 மணியுடன் பிரசாரம் நிறைவு பெறுகிறது. இந்நிலையில் தான் அதிமுக - பாஜக கூட்டணியில் செயல்பட்டு வரும் ந நடிகரும், இயக்குநரும், தயாரிப்பாளருமான ஆர்கே சுரேஷ், சீமானுக்கு ஆதரவாக வீடியோ வெளியிட்டுள்ளார். காரைக்குடி மக்களே சீமானை வெற்றி பெற வையுங்கள் என்று அவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஆர்கே சுரேஷ் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியுள்ளதாவது:

சீமான் சட்டசபைக்கு போக வேண்டும்

அனைவருக்கும் வணக்கம். நான் ஆர்கே சுரேஷ் பேசுகிறேன். சூட்டிங்கில் இருந்து பேசுகிறேன். சூட்டிங் போய் கொண்டுள்ளது. அன்பார்ந்த காரைக்குடி மக்களுக்கு வணக்கம். உங்களுக்கு ஒரு சின்ன கோரிக்கை.. சின்ன கோரிக்கை அல்ல. பெரிய கோரிக்கை தான் இது. ஒரு நல்ல மனிதன். நல்ல அரசியல்வாதி. தலைசிறந்த அரசியல்வாதி. பண்பாளன், தமிழுக்காக இன்று இல்லை, என்றைக்குமே உழைத்து கொண்டு இருக்கும் நபர் (நாம் தமிழர் சீமான்). அவர் சட்டசபைக்கு வரட்டுமே ஒரு தடவை.

விட்றாதீங்க காரைக்குடி மக்களே

காரைக்குடி மக்களே விட்றாதீங்க.. எந்த விஷயத்திற்காகவும் விட்றாதீங்க.. எதற்காகவும் விட்றாதீங்க.. நான் அதிமுக - பாஜக கூட்டணியில் இருக்கிறேன். நான் அவங்களுக்கு தான் சப்போர்ட் பண்ணுகிறேன். ஆனால் ஒரு தமிழனாக காரைக்குடியில் அவர் நிற்கும் தொகுதியில் அவரை போன்ற தமிழன் சட்டசபைக்கு வர வேண்டும் என்பது என்னுடைய ஆசையல்ல.. அவரை நம்பி ஓட்டுப்போட்ட 40 லட்சம் மக்களின் ஆசை.

சித்தாந்தத்தை தாண்டி நல்ல மனிதர்

எந்த காரணம் கொண்டும் அவரை தோற்கடித்து விடாதீர்கள். அத்தகைய தோல்வி அவர் தோற்பதாக இருக்காது. நீங்கள் தோற்கிறது. உங்க தொகுதி தோற்கிறதா மாறிவிடும். ஒருமுறை வரட்டும். பாருங்கள். அவரது சித்தாந்தம் என்பது வேறுபாடானது. ஆனால் சித்தாந்தத்தை தாண்டி அவரை ஒரு மனிதராக எனக்கு ரொம்ப பிடிக்கும்.

15 ஆண்டுகளாக போராடுகிறார்

தமிழ் தேசியத்தை பிடிக்கும். என்னுடைய சில விஷயங்களும், அவர்களின் கோட்பாடுக்கு ஒத்துவரவில்லை. ஒரு மனிதராக அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். தமிழ் தேசியத்தின் மகனாக அவரை எனக்கு பிடிக்கும். அவர் 15 ஆண்டுகளாக போராடி வருகிறார். திரும்ப திரும்ப எழுந்து வந்து போராடி வருகிறார். அவரது தனித்தன்மைக்காகவே அவருக்கு ஓட்டுப்போட வேண்டும் என்று நான் கோரிக்கை வைக்கிறேன். தயவுசெய்து அவருக்காக ஓட்டுப்போடுங்கள்.. நன்றி'' என்று கூறியுள்ளார்.

ஐஜேகே கட்சியில் ஆர்கே சுரேஷ்

காரைக்குடி தொகுதியில் சீமானுக்கு ஆதரவாக வாக்களிக்க கூறியுள்ள நடிகர் ஆர்கே சுரேஷ் முதலில் பாஜகவில் செயல்பட்டு வந்தார். அதன்பிறகு பாஜகவில் இருந்து விலகி பாரிவேந்தரின் ஐஜேகே எனும் இந்திய ஜனநாயக கட்சியில் இணைந்தார்.

அந்த கட்சியில் அனைத்திந்திய துணை பொதுச்செயலாளராக செயல்படடு வருகிறார். தற்போது ஐஜேகே கட்சி அதிமுக - பாஜக கூட்டணியில் உள்ளது. இந்நிலையில் தான் ஆர்கே சுரேஷ் தனிப்பட்ட முறையில் சீமானுக்கு ஆதரவாக காரைக்குடி தொகுதி மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று வீடியோ வெளியிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+