ஸ்டாலினை தொடர்ந்து சீண்டும் கராத்தே தியாகராஜன்... பதிலடிக்கு தயாராகும் ஜெ.அன்பழகன்
சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னை மாநகராட்சி முன்னாள் பொறுப்பு மேயர் கராத்தே தியாகராஜன் தொடர்ந்து சீண்டுவதால் அவருக்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ.
காங்கிரஸ் கட்சியில் இருந்து தாம் நீக்கப்பட்டதற்கு காரணம் மு.க.ஸ்டாலின் தான் காரணம் எனக் கருதும் கராத்தே தியாகராஜன் தொடர்ந்து அவரை சீண்டும் வகையில் விமர்சனம் செய்து வருகிறார்.
இதனால் அவருக்கு பதிலடி கொடுக்க சென்னை மேற்கு மாவட்டச் செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான ஜெ.அன்பழகன் தயாராகிவிட்டார்.

கருத்து வேறுபாடு
சென்னை மாநகராட்சி மேயராக மு.க.ஸ்டாலின் இருந்தபோது, துணை மேயராக கராத்தே தியாகராஜன் இருந்தார். அப்போது முதலே ஸ்டாலினுக்கும், காரத்தே தியாகராஜனுக்கும் ஏழாம் பொருத்தம் தான். அதிமுகவில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு கராத்தே தியாகராஜன் இடம்பெயர்ந்தாலும் ஸ்டாலுனுடனான கருத்து வேறுபாடு தொடர்ந்த வண்ணமே இருந்தது.

கட்சியிலிருந்து நீக்கம்
திமுக கூட்டணியில் இருந்துகொண்டே கராத்தே தியாகராஜன் பேசிய சில விவகாரம் மு.க.ஸ்டாலினை கடும் கோபம் கொள்ளச் செய்தது. மேலும், கூட்டணிக்கு வேட்டு வைக்கும் வகையில் அவர் பேசியது காங்கிரஸ் முன்னணி தலைவர்களை பலரையே திடுக்கிடச் செய்தது. இதன் விளைவாக காங்கிரஸ் கட்சியிலிருந்து கராத்தே தியாகராஜன் நீக்கப்பட்டார்.

தொடர்ந்து சீண்டல்
மு.க.ஸ்டாலின் கொடுத்த அழுத்தம் காரணமாகவே தாம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக மேடைக்கு மேடை புகார் கூறும் கராத்தே தியாகராஜன் அண்மைக்காலமாக ஸ்டாலினை சீண்டும் வகையில் பல கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். நேற்று முன் தினம் செய்தி தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பேசிய அவர், ஸ்டாலினுக்கும், ரஜினிக்கும் ஒட்டப்பந்தயம் வைக்கலாமா என்றும், ஸ்டாலின் என்ன இளைஞரா எனவும் பேசியிருந்தார்.

தக்க பதிலடி
இதனால் பொறுத்து பொறுத்து பார்த்த திமுக முகாம் சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன் மூலம் பதிலடி தரும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. ஜெயலலிதாவின் கோபத்துக்கு கராத்தே தியாகராஜன் ஆளானது உள்ளிட்ட சில பழைய விவகாரங்களை கிளப்ப உள்ளது திமுக.
-
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications