சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கேஎஸ் அழகிரி நீக்கப்படுவார்.. தமிழக காங் தலைவராக நான் நியமிக்கப்படுவேன்.. கராத்தே தியாகராஜன்

Google Oneindia Tamil News

Recommended Video

    சென்னை: கட்சிக்கு எதிரான செயல்பாடு..! காங்கிரசில் இருந்து கராத்தே தியாகராஜன் நீக்கம்...

    சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவராக கே எஸ் அழகிரி வகிக்கும் பதவிக்கு நான் விரைவில் வருவேன் என தென் சென்னை மாவட்ட தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட கராத்தே தியாகராஜன் தெரிவித்தார்.

    காமராஜ் பிறந்தநாள் விழா மற்றும் தென் சென்னை காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அடையாறில் உள்ள கராத்தே தியாகராஜன் இல்லத்தில் நேற்று நடைபெற்றது.

    அப்போது கராத்தே தியாகராஜன் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசினார். அவர் பேசுகையில் கருணாநிதியை தமிழர் இல்லை என்று கூறியவர் நடிகை குஷ்பு. இதற்கான ஆடியோ என்னிடம் உள்ளது.

    பெரிய நடிகர்கள் எல்லாம் பயந்துகிட்டு இருக்கும் போது சூர்யாவாவது பேசறாரேனு பெருமைப்படுங்க!.. சீமான்பெரிய நடிகர்கள் எல்லாம் பயந்துகிட்டு இருக்கும் போது சூர்யாவாவது பேசறாரேனு பெருமைப்படுங்க!.. சீமான்

    கே எஸ் அழகிரி

    கே எஸ் அழகிரி

    கே.எஸ். அழகிரி பொறுப்புக்கு நான் கூடிய விரைவில் வருவேன். அதாவது தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு கூடிய விரைவில் நியமிக்கப்படுவேன் என கராத்தே தியாகராஜன் தெரிவித்தார்.

    சுயமரியாதை

    சுயமரியாதை

    இதைத் தொடர்ந்து இந்த கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல்காந்தியே தொடர வேண்டும். காங்கிரஸ் கட்சிக்கு சுயமரியாதை வேண்டும். தன்மானம் வேண்டும் என்ற கருத்தோடு வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் கண்ணியமான கூட்டணி அமைய வேண்டும்.

    காங்கிரஸ் தலைமை

    காங்கிரஸ் தலைமை

    காங்கிரசிற்கு காலம் காலமாக உழைக்கும் தொண்டர்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் வாய்ப்பளிக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் கராத்தே தியாகராஜன் பேசியதற்கு கட்சி விரோத நடவடிக்கையாக அவர் மீது தமிழக காங்கிரஸ் தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது.

    தனித்து போட்டி

    தனித்து போட்டி

    தமிழக காங்கிரஸ் தலைமையின் தவறான தகவலின் பேரில் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையை டெல்லி காங்கிரஸ் மேலிடம் ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிட வேண்டும் என கராத்தே தியாகராஜன் சில நாட்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார்.

    போட்டி

    போட்டி

    இதற்கு பதிலடியாக திருச்சியில் அதிமுக அரசை கண்டித்து திமுக சார்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே. என். நேரு பேசுகையில் காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை நாட்கள்தான் பல்லக்கு தூக்குவது, திமுகவும் உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும் என்றார்.

    கராத்தே நீக்கம்

    கராத்தே நீக்கம்

    பதிலுக்கு பதில் கூறப்பட்ட கருத்தாக இருந்தாலும் இது கூட்டணிக்கிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து தென் சென்னை மாவட்ட தலைவர் பொறுப்பிலிருந்து கராத்தே தியாகராஜன் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Karate Thiyagarajan says that he will be soon become TN Congress Committee President.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X