சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அந்த 10 கோடி எங்க பாஸு.. எடுத்து விடவா... கண்ணாடி வீட்டில் கல்லெறியும் சஸ்பெண்ட் தியாகராஜன்!

By Staff
Google Oneindia Tamil News

Recommended Video

    காஞ்சிபுரம் : காங்கிரஸ் கட்சியினர் மீது கராத்தே தியாகராஜன் குற்றச்சாட்டுகிறார் விஜயதாரணி கருத்து.

    சென்னை: தினமும் ஒரு பஞ்சாயத்தை கூட்டலேன்னா தமிழக காங்கிரஸுக்கு என்ன மரியாதை. அந்த வகையில் இப்போது கராத்தே தியாகராஜன், கிருஷ்ணகிரியின் எம்.பி.யான செல்லக்குமாருக்கு வைத்திருக்கும் ரிவர்ஸ் ரிவிட்டுதான் தாறுமாறான பிரச்னையாக ஓடிக் கொண்டிருக்கிறது.

    அதாவது கட்சியின் கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்டதாக, பேசியதாக தென்சென்னை மாவட்ட தலைவராக இருந்த கராத்தே தியாகராஜனை சஸ்பெண்ட் செய்தது காங்கிரஸ் நிர்வாகம். இதற்கு பரிந்துரை செய்தது தமிழக காங்கிரஸ் தலைவரான கே.எஸ்.அழகிரி.

    கராத்தே மீது சமீபத்தில் தாறுமாறான விமர்சனங்களை வைத்திருந்தார் கிருஷ்ணகிரி தொகுதியின் காங்கிரஸ் எம்.பி.யான செல்லக்குமார். இதற்கு பதில் ஆப்பு வைத்து ஒரு பேட்டியை தட்டியுள்ளார்.

    மைன்ட் வாய்ஸ் மன்னாரு... சரியான நிதானம், தவறான வேகம்.. ஆத்தாடி, என்னா டயலாக் டெலிவரி.. ஆஸம்ணே! மைன்ட் வாய்ஸ் மன்னாரு... சரியான நிதானம், தவறான வேகம்.. ஆத்தாடி, என்னா டயலாக் டெலிவரி.. ஆஸம்ணே!

    தகுதி இருக்கா குமாரு

    தகுதி இருக்கா குமாரு

    அதன் ஹைலைட் சமாசாரங்களாவன.... என்னையெல்லாம் விமர்சனம் செய்ய எந்த அருகதையும் செல்லக்குமாருக்கு இல்லை. அவரைப் பற்றி சில விஷயங்களைச் சொல்கிறேன் கேளுங்கள். கோவாவில் காங்கிரஸ் ஆட்சியமைக்கும் வாய்ப்பை நழுவவிட்டதால் கோவா பொறுப்பாளராக இருந்த திக்விஜய் சிங்கை நீக்கிவிட்டு, செல்லக்குமாரை நியமித்தது டெல்லி மேலிடம்.

    குமாரோட லட்சணம் பாருங்க

    குமாரோட லட்சணம் பாருங்க

    இவர் பொறுப்பாளர் ஆனதும் காங்கிரஸ் கட்சியின் பத்து எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறியுள்ளனர். இதுதான் செல்லக்குமாரின் நிர்வாக லட்சணம்.
    அவரது பர்ஷனல் பக்கத்தை சொல்லவா?...2014 லோக்சபா தேர்தலின்போது கர்நாடக பொறுப்பாளராகவும் இருந்தார் செல்லக்குமார். அப்போது அந்த பதவியை வைத்துக் கொண்டு கர்நாடகத்தில் தேர்தல் செலவுக்கு என பத்து கோடியை வசூல் செய்திருக்கிறார்.

    ஆதாரம் இருக்குண்ணே

    ஆதாரம் இருக்குண்ணே

    இதை ஆதாரமில்லாமல் நான் சொல்லவில்லை. ராஜிவின் நினைவு ஸ்தூபிக்கு மரியாதை செய்வதற்காக கர்நாடக அமைச்சராக இருந்த டி.கே.சிவக்குமார் வந்தார். அவரை நான் அழைத்துச் செல்கையில் இதை அவர்தான் என்னிடம் சொன்னார். இப்படிப்பட்ட விஷயங்கள்தான் செல்லக்குமாரின் லட்சணங்கள்.

    சுத்தமான கை இல்லை

    சுத்தமான கை இல்லை

    ஆக கட்சிக்கு நன்மையை ஈர்த்து வரைக்கூடிய திறனும் அவரிடம் இல்லை, கை சுத்தமாக இருந்து தமிழக காங்கிரஸின் பெயரைக் காப்பாற்றக்கூடிய பண்பும் அவரிடம் இல்லை. இவரெல்லாம் என்னைப் பற்றி விமர்சனம் செய்கிறார். செல்லக்குமார் பற்றிய ரகசியங்களை இன்னும் எடுத்துவிடுவேன். வெயிட் & ஸீ " என்று வார்த்தைகளில் கராத்தே போட்டிருக்கிறார் தியாகராஜன்.

    இதற்கு செல்லக்குமார் தரப்பு என்ன பதிலடி தர இருக்கிறது என்பதை பார்ப்போம். ஹும் அரசியல் புள்ளிகள் ரெண்டுபட்டால் மீடியாவுக்கு செம்ம விருந்துதானே.. அவ்வ்வ்!

    - ஜி.தாமிரா

    English summary
    Sacked Congress leader Karate Thiyagarajan has slammed Krishnagiri MP Dr Chellakumar.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X