கர்நாடகாவில் போட்டியிடாமல் முதல்வர்? 'இதிலுமா'.. அண்ணாமலையை வம்பிழுத்த காயத்ரி ரகுராம்
சென்னை: காங்கிரஸ் மேலிடத்தின் நீண்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர கர்நாடகா முதலமைச்சராக சித்தராமையா தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணை முதல்வராக டிகே சிவகுமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதை வைத்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை நடிகை காயத்ரி ரகுராம் கிண்டல் செய்து ட்விட் போடடுள்ளார்.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் பாஜக பொறுப்பாளர்களில் ஒருவராக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நியமிக்கப்பட்டிருந்தார். அண்ணாமலை தீவிரமாக பிரச்சாரம் செய்தார். பல்வேறு தொகுதிகளுக்கு வியூகமும் வகுத்தார். எனினும் பாஜக கர்நாடாகவில் தோல்வியை தழுவியது. கணிசமான தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.

காங்கிரஸ் கட்சி தனி பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்துள்ளது. காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றாலும், கர்நாடகாவில் யார் முதல்வர் என்பதில் டிகே சிவகுமார், சித்தராமையா இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியாக சித்தராமையா முதல்வராகவும், டிகே சிவகுமார் துணை முதல்வராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரத்தை வைத்து நடிகை காயத்ரி ரகுராம், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை விமர்சித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில், "முழு சிரமத்துடன் அண்ணாமலை காங்கிரஸுக்குப் பிரச்சாரம் செய்தார். பாரதிய ஜனதா கட்சி அவர்களின் சொந்த மேனேஜர் அண்ணாமலையை அனுப்பி வைத்ததால், அண்ணாமலை போட்டியிடாமல் முதல்வர் ஆகிவிடுவார் என்று முழு நம்பிக்கையில் இருந்தது டெய்பர்ரூம். இப்போது முதல்வர் சித்தராமையாவும், துணை முதல்வர் டி.கே.சிவக்குமாரும் கர்நாடகா தேர்வு செய்யப்பட்டு வருகிறது வாழ்த்துகள். ஆனால் இது அண்ணாமலைக்கு ஏமாற்றம்." என்று கிண்டல் செய்துள்ளார்.
பாஜகவில் இருந்து விலகிய பின்னர் காயத்ரி ரகுராம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
அண்ணாமலை கைகளை பிடித்த அஜித், ரஜினி.. மதுரையில் பரபரக்கும் போஸ்டர்களால் அதிரும் அரசியல் களம்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான்












Click it and Unblock the Notifications