அடேங்கப்பா! அமித்ஷாவையே மிரளவிடும் டிகே சிவக்குமார்.. கர்நாடகா காங்கிரஸ் தலைவருக்கு இவ்வளவு சொத்தா?
சென்னை: காங்கிரஸ் எம்எல்ஏக்களை பாதுகாக்கும் விஷயத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கே சவால் விடும் கர்நாடகா காங்கிரஸ் கட்சியின் தலைவரான டிகே சிவக்குமார் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். அதன்படி அவரது சொத்து மதிப்பு ரூ.1000 ஆயிரம் கோடியை கடந்துள்ளதும், கடந்த 5 ஆண்டில் மட்டும் சொத்து மதிப்பு ரூ.500 கோடியை தாண்டியதும் தெரியவந்தது.
கர்நாடகாவில் 224 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு ஒரே கட்டமாக மே மாதம் 10ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. மே 13ல் ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தேர்தலையொட்டி பாஜக, காங்கிரஸ், ஜேடிஎஸ், ஆம்ஆத்மி உள்பட பல கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துள்ளன.
காங்கிரஸ் சார்பில் மாநில தலைவர் டிகே சிவக்குமார் மீண்டும் ராமநகர் மாவட்டம் கனகபுரா தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தொகுதி அவரது சொந்த தொகுதியாகும். கடந்த 2008, 2013, 2018 ஆகிய சட்டசபை தேர்தல்களில் கனகபுரா தொகுதியில் டிகே சிவக்குமார் வெற்றி பெற்றார்.
டிகே சிவக்குமார்: தற்போது 4வது முறையாக அந்த தொகுதியில் அவர் போட்டியிட்டுள்ளார். இவரை எதிர்த்து பாஜக சார்பில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர் அசோக் களமிறக்கப்பட்டுள்ளார். இதனால் டிகே சிவக்குமார் - ஆர் அசோக் இடையே கடும் போட்டி நிலவ வாய்ப்புள்ளது. டிகே சிவக்குமாரை பொறுத்தமட்டில் காங்கிரஸ் கட்சியின் மிக முக்கிய தலைவராக உள்ளார். குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் ஆபரேஷன் தாமரை மூலம் எம்எல்ஏக்களை பாஜகவினர் இழுக்க முயன்றதாக கூறப்பட்டபோது அங்குள்ள எம்எல்ஏக்கள் டிகே சிவக்குமாரின் மேற்பார்வையில் கர்நாடகாவில் வைக்கப்பட்டனர்.

அமித்ஷாவுக்கே சவால்: இதன்மூலம் மத்திய உள்துறை அமித்ஷாவுக்கே, டிகே சிவக்குமார் நேரடியாக சவால் விடுத்து இருந்தார். மேலும் காங்கிரஸ் கட்சி மீண்டும் கர்நாடகாவில் ஆட்சியை பிடித்தால் முதல்வர் பதவிக்கு டிகே சிவக்குமாரின் பெயரும் முன்னணியில் உள்ளது. பாஜக வேட்பாளரான அமைச்சர் ஆர் அசோக், டிகே சிவக்குமார் ஆகியோர் ஒக்கலிகர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் ஓட்டுகள் பிரிய வாய்ப்புள்ளது. இதனால் தான் அவரை வீழ்த்தும் முனைப்பில் பாஜகவில் அமைச்சர் ஆர் அசோக்கை பாஜக களமிறக்கியுள்ளது.
வேட்புமனுத்தாக்கல்: இந்நிலையில் தான் டிகே சிவக்குமார் ராமநகர் மாவட்டம் கனகபுரா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக நேற்று வேட்புமனுத்தாக்கல் செய்தார். அதில் தனது சொத்து விபரங்களை அளித்து இருந்தார். அதன்படி கடந்த 2018ல் டிகே சிவக்குமாரின் சொத்து மதிப்பு ரூ.840 கோடியாக இருந்தது. இந்நிலையில் தான் டிகே சிவக்குமாரின் சொத்து மதிப்பு தற்போது ரூ.1,000 கோடியை கடந்துள்ளது.
ரூ.1,214.93 கோடி: மேலும் கடந்த 5 ஆண்டுகளில் அவரது சொத்து மதிப்பு ரூ.595 கோடி வரை உயர்ந்துள்ளது. அதாவது டிகே சிவக்குமாரின் தற்போதைய சொத்து மதிப்பு ரூ.1,214.93 கோடியாக இருக்கிறது என வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிகே சிவக்குமாரின் மனைவி, மகள் மற்றும் மகனின் சொத்துகளை சேர்த்தால் மொத்த மதிப்பு ரூ.1,415 கோடியாக அதிகரித்துள்ளது. இதுதவிர டிகே சிவக்குமாரின் ஆண்டு வருமானம் ரூ.14.24 கோடியாகும். அவரது மனைவியின் வருமானம் ரூ.1.90 கோடியாக இருக்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்க நகைகள் எவ்வளவு: மேலும் டிகே சிவக்குமாரின் குடும்பத்தினரிடம் 2.184 கிலோ தங்கம், 12 கிலோ வெள்ளி, ரூ.2.26 கோடி இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் ரூ.9 லட்சம் மதிப்புள்ள வைர நகைகள் உள்ளது. மேலும் ரூ.9 லட்சம் மதிப்புள்ள ரோலக்ஸ் வாட்ச், ரூ.23.90 லட்சம் மதிப்புள்ள ஹூப்லட் வாட்ச் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் டிகே சிவக்குமாரின் மனைவி பெயரில் ரூ.34.53 கோடி கடன் உள்ளது. மகன் பெயரில் ரூ.3.81 கோடியும், மகள் பெயரில் ரூ.8.25 கோடி கடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்குகள்: மேலும் டிகே சிவக்குமார் மீது வருமான வரித்துறை, லோக்ஆயுக்தா மற்றும் அமலாக்கத்துறையினர் உள்பட மொத்தம் 19 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications