கர்நாடகாவில் தமிழர்கள் படுகொலை.. "தவறு செய்தவர்களுக்கு.." கண்கள் சிவந்த முதல்வர் விஜய்.. ஆவேசம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கர்நாடகாவில் வனத்துறை அதிகாரிகள் தமிழர்களை சுட்டு கொன்ற சம்பவத்திற்கு முதல்வர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாகக் கர்நாடக வனத்துறை கொடுத்த விளக்கம் ஏற்புடையதல்ல என்று கூறியுள்ள முதல்வர் விஜய், இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பாக நேர்மையான விசாரணை நடைபெற வேண்டும் என்றும் இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

கர்நாடகா மாநிலம் சாமராஜ்நகர் மாவட்டத்தில் 3 தமிழர்களை கர்நாடக வனத்துறை அதிகாரிகள் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். அதாவது சாமராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள காவிரி வனவிலங்கு சரணாலயத்துக்கு உட்பட்ட ஆனூர் வனவிலங்கு மண்டலத்தில் ஹோலேமுராடி வனப்பகுதியில் மான் வேட்டை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Karnataka Forest Firing Vijay

இந்த தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள், அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியதாக தெரிகிறது.. இந்தச் சம்பவத்தில் மரியமங்களா கிராமத்தை சேர்ந்த அந்தோணி சுவாமி, லாசர் டோடியா குமார் மற்றும் ஜெகநாதன் டோடியா பீட்டர் ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். அங்கிருந்து 2 துப்பாக்கிகளும், சுமார் 20 கிலோ விலங்கு இறைச்சி அடங்கிய பைகளும் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், பல்வேறு தரப்பினரும் கர்நாடக அரசின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இதற்கிடையே இந்தச் சம்பவத்திற்கு முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "கர்நாடகாவின் சாம்ராஜ் நகர் மாவட்டம், ஹனூர் தாலுக்காவில் உள்ள கிராமங்களில் வசித்து வந்த தமிழர்களான அந்தோணி சாமி, ஜான் ரோஸ் பீட்டர், குமார் ஆகியோர், 2026 ஆகஸ்ட் 15 அன்று அதிகாலையில், காவிரி வனவிலங்கு சரணாலயப் பகுதியில், கர்நாடக வனத் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டது வேதனை அளிக்கிறது. இந்தப் படுகொலையை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

இந்தச் சம்பவம் தொடர்பாகக் கர்நாடக வனத்துறை கொடுத்த விளக்கம் ஏற்புடையதல்ல. இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பாக நேர்மையான விசாரணை நடைபெற வேண்டும். உயர்மட்ட விசாரணைக் குழு அமைத்து, தவறிழைத்தவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் கர்நாடக அரசு வழங்க வேண்டும். இதுபோன்று இனியொரு சம்பவம் நடக்காமல் இருக்க, கர்நாடக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+