மேகதாது குறித்து பேச்சுவார்த்தைக்கு தயார்.. தமிழக முதல்வருக்கு கர்நாடக அமைச்சர் கடிதம்
சென்னை: மேகதாது அணை குறித்து பேச்சுவார்த்தை நடத்த நேரம் ஒதுக்குமாறு தமிழக முதல்வருக்கு கர்நாடக அமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள மேகதாது என்ற இடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கு ரூ. 5600 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது. அதன்படி வரைவு திட்ட அறிக்கை தயார் செய்து மத்திய நீர் வள ஆணையத்திடம் சமர்ப்பித்தது.

அந்த ஆணையமும் மேகதாதுவில் ஆய்வு செய்யுமாறு கர்நாடக அரசுக்கு ஒப்புதல் அளித்துவிட்டது. இதை தமிழக அரசு வன்மையாக கண்டித்தது. இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்திலும் தமிழக அரசு தனது எதிர்ப்பை பதிவு செய்தது.
மேகதாதுவுக்கு மத்திய அரசு ஒப்புதலை கண்டித்து இன்று மாலை 4 மணிக்கு சட்டசபையில் சிறப்பு கூட்டம் நடத்தப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. இந்நிலையில் கர்நாடக முதல்வர் குமாரசாமி தலைமையில் ஆலோசனை கூட்டமும் நிகழ்ந்துள்ளது.
இதில் நீர் வளத் துறை அமைச்சர் சிவகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு தயார் என தமிழக முதல்வருக்கு கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவகுமார் கடிதம் எழுதியுள்ளார்.
மேலும் மேகதாது அணை குறித்து விளக்கமளிக்க பேச்சுவார்த்தைக்கு நேரம் ஒதுக்க வேண்டும் என முதல்வர் பழனிசாமிக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் எந்த வித பேச்சுவார்த்தைக்கும் நாங்கள் தயாராக இல்லை என தமிழக அமைச்சர் சிவி சண்முகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications