அப்போலோ மருத்துவமனையில் கார்த்தி சிதம்பரத்திற்கு அறுவை சிகிச்சை சக்சஸ்! என்ன பிரச்சனை?
சென்னை: சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் கார்த்தி சிதம்பரத்துக்கு, வயிற்றில் சிறியளவிலான அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சாப்பாட்டில் சமரசமில்லை: முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், சிவகங்கை தொகுதி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். அசைவ உணவுகளை வெளுத்துக்கட்டும் பழக்கம் உடைய இவர் வாரத்தில் குறைந்தது 6 நாட்களாவது அசைவம் சாப்பிடக்கூடியவர். சாப்பாடு விஷயத்தில் மட்டும் சமரசமே செய்யாத அவர், தனக்கு காய்ச்சலோ உடல் வலியோ ஏற்பட்டால் நண்டு சூப்பும், கோழி ரசமும் சாப்பிட்டு மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்ளாமலேயே சரி செய்யக் கூடியவர்.

வயிறு குடல் பிரச்சனை: இந்நிலையில் தான் வயிறு குடல் பிரச்சனை காரணமாக அவதிப்பட்டு வந்த கார்த்தி சிதம்பரம் சென்னை கிரீம்ஸ் சாலை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர் சந்தோஷ் ஆனந்த் தலைமையிலான மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்து வருகிறது. இதனிடையே சிகிச்சையின் ஒரு பகுதியாக மயக்க மருந்து செலுத்தப்பட்டு இன்று மைனர் சர்ஜரியும் மேற்கொள்ளப்பட்டது. இதனிடையே இது குறித்து அறிக்கை விடுத்துள்ள அப்போலோ மருத்துவமனை நிர்வாகம், கார்த்தி சிதம்பரம் குணம் அடைந்து வருவதாக தெரிவித்துள்ளது.
ஓரிரு நாட்களில் டிஸ்சார்ஜ்: அட்வான்ஸ் டெக்னாலஜியில் சிறியளவில் துளையிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட அறுவைச் சிகிச்சை என்பதால் கார்த்தி சிதம்பரம் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் எனத் தெரிகிறது. எனினும் அவர் ஓரிரு வாரங்கள் ஓய்வெடுப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது. தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவிக்கான ரேஸில் கார்த்தி சிதம்பரமும் இடம்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆதரவாளர்கள் யாரும் அப்போலோ மருத்துவமனைக்கு வர வேண்டாம் எனவும் கார்த்தி சிதம்பரம் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மீண்டும் சிவகங்கையில் களம்: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் திட்டத்தில் உள்ள கார்த்தி சிதம்பரம், அதற்கான அடித்தளப் பணிகளை தொடங்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications