"இடி" சொல்.. "ரூ.1000 கிடைக்காதவங்க, திமுகவுக்கு எதிராக திரும்பிட்டா?.. "குழப்பமாச்சே" வெடித்த குரல்
சென்னை: 1000 ரூபாய் கிடைக்காதவர்கள், திமுகவுக்கு எதிரான ஓட்டுக்களை பதிவு செய்தால் என்ன ஆகும்? என்ற கேள்வி தமிழக அரசியலில் விவாதத்தை உருவாக்கி விட்டுள்ளது.
2 மாதங்களுக்கு முன்பு, காங்கிரஸ் எம்பியான கார்த்தி சிதம்பரம் ஒரு பேட்டி தந்திருந்தார்.. அதாவது, 1000 ரூபாய் உரிமைத்தொகை குறித்து, அரசு தரப்பில் அறிவிப்பு வந்தபோதே, கார்த்தி சிதம்பரம் பேசிய கருத்துக்கள், தமிழக அரசியலை திரும்பி பார்க்க வைத்தன.
எந்தவொரு திட்டத்தை அமல்படுத்தும்போதும் இவர்களுக்கு கொடுக்கலாம். இவர்களுக்கு கொடுக்க வேண்டாம் என்ற வகையில் விதிமுறைகள், வரைவு போடப்பட்டால் கண்டிப்பாக ஏமாற்றங்கள்... மனவருத்தங்கள் வரத்தான் செய்யும்.. என்னை பொறுத்தவரை யூனிவர்செல்லாக அனைவருக்கும் கொடுப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

குழப்பம்: அதிகாரிகளிடம் இந்த பட்டியலில் ஒருவரை சேர்க்கலாம். சேர்க்க வேண்டாம் என்ற அதிகாரம் கொடுத்தால் குழப்பம் தான் வரும். மற்ற திட்டங்களை நான் பார்த்துள்ளேன்... குழப்பம் தான் வருகிறது. என்னை பொறுத்தவரை எந்த திட்டமாக இருந்தாலும் விதிவிலக்கு என்பது இருக்கக்கூடாது... நான் தமிழ்நாட்டு அரசுக்கு மட்டும் இதனை சொல்வதாக இல்லை. பொருளாதார ரீதியாக நான் சொல்கிறேன்..
யூனிவர்சல்: ஏனென்றால் விதிவிலக்கு இருக்க கூடாது. யூனிவர்செல்லாக அனைவருக்கும் கொடுத்து விட வேண்டும். வசதி வாய்ந்தவர்களுக்கும், அந்த தகுதிக்குள் அடங்காதவர்களுக்கு இந்த பலன் சேரும் வாய்ப்பு உண்டு. இருந்தாலும் பரவாயில்லை என நினைப்பவன் நான். யாரையும் ஒதுக்கிவிட்டு இந்த திட்டத்தை அமல்படுத்த கூடாது. அதற்கான நிதியை திரட்டுவதற்கு அரசு முயற்சி செய்ய வேண்டும் என்பது தான் எனது கருத்து'' என்றார்.
திமுக கூட்டணியில் இருந்தாலும்கூட, எதைப்பற்றியும் கவலைப்படாமல், பொதுமக்களின் நன்மையை கருதி, கார்த்தி சிதம்பரம் இப்படி சொல்லியிருந்தது, பலரது கவனத்தையும் ஈர்த்ததுடன், மிக முக்கிய கருத்தாகவும் பார்க்கப்பட்டது. இப்போதும் இதே கருத்தைதான் கார்த்தி சிதம்பரம் சொல்லி உள்ளார்.
தமிழகத்தில், மகளிருக்கு உரிமைத்தொகை வழங்குவதை காங்கிரஸ் வரவேற்கிறது. அதே வேளையில், தகுதி அடிப்படையில், அதை வழங்குவதை தளர்த்த வேண்டும். அந்த தொகை கிடைக்காதவர்கள் மத்தியில், இது அதிருப்தியையே ஏற்படுத்தும் என்பதால், அனைவருக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கார்த்தி சிதம்பரம் கூறியிருக்கிறார். கார்த்தியின் இந்த பேச்சு விவாதங்களை கிளப்பி விட்டுள்ளது..
ஏமாற்றம்: "தகுதிவாய்ந்தவர்களுக்கு மட்டுமே பணம் கிடைக்க வேண்டும் என்றால், அந்த தகுதி எதை வைத்து தீர்மானிக்கப்படுகிறது? என் தங்கச்சிகளின் தகுதியை தீர்மானிக்க, நீங்கள் யார்?" என்று சீமான் ஒருமுறை, கேட்ட கேள்வியையும் இங்கு நாம் நினைவூட்ட வேண்டியுள்ளது.
இன்றைய தினம் இந்த திட்டம் ஜரூராக துவங்கி வைக்கப்பட்டுள்ளது.. ஆனால், ஒரு தரப்பினருக்கு மட்டுமே 1000 ரூபாய் கிடைத்துள்ள நிலையில், பலர் ஏமாற்றமடைந்தை மறுக்க முடியாது..
ஆனால், ரூ.1,000 பெற்றுக்கொண்டு மகிழ்ச்சியோடு செல்லும் பயனாளிகளைப் பார்த்து, பணம் கிடைக்கப்பெறாதவர்கள் அதிருப்தியடையாத விதமாக, திட்டத்தின் தொடக்க விழா நடக்கும் இடத்திலேயே, அரசு அதிகாரிகள் முகாம் அமைக்க வேண்டும் முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார் என்பது ஆறுதலான விஷயம். அத்துடன், இவர்களது மேல்முறையீட்டுக்கான கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்டு "பரிசீலிக்கிறோம்" என விண்ணப்பதாரர்களிடம் கூற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்களாம்.
பொருமல்கள்: "தகுதி அடிப்படையில் மட்டுமே உரிமைத்தொகை" என்றபோதே, திமுக மீதான விமர்சனங்கள் சூழ்ந்துவிட்டன என்றே சொல்லலாம். எதிர்க்கட்சிகளும் இதற்காகத்தான் காத்து கிடந்தன. பலன் கிடைக்கப்பெறாத, பெண்களிடமிருந்து வெளிவரும் பொருமல்களையும், அதிருப்திகளையும் எதிர்நோக்கியே, எதிர்க்கட்சிகளும் காத்துகொண்டிருக்கின்றன.. இதைவைத்து, திமுக மீதான விமர்சனத்தையும் பூதாகரமாக்க தயாராகி வருகிறார்கள்..
அதிலும் அதிமுக இந்த விஷயத்தில் படுமும்முரமாக உள்ளது. காரணம், அதிமுகவுக்கு எப்போதுமே பெண்களின் வாக்குகள் அதிகம். இந்த உரிமைத்தொகை விஷயத்தில், பிரதான வாக்குகளை திமுகவுக்கு விட்டுத்தர, அதிமுக தயாராக இல்லை.. அதனால், விண்ணப்பித்த பெண்களில் கணிசமானோருக்கு உரிமைத்தொகை கிடைக்காவிட்டாலும், இந்த விஷயத்தை அதிமுக விடப்போவதில்லை.. அதிமுகவே தீவிர எதிர்ப்பில் உள்ளபோது, அண்ணாமலையும் நிச்சயம் விடப்போவதில்லை..
கூட்டணி குரல்: எதிர்க்கட்சிகள் எப்படியும் இது தொடர்பாக பிரச்சனையை கிளறுவார்கள் என்று எதிர்பார்த்தால், சொந்த கூட்டணியில் இருந்து கார்த்தி சிதம்பரமே இந்த கருத்தை வெளிப்படையாக சொல்லிவிட்டார்.. திமுகவுக்கான எதிர்ப்பை கார்த்தி சிதம்பரம் பதிவு செய்துள்ளார் என்று சொல்ல முடியாது, மாறாக, திமுக மீதான அக்கறையையே வெளிப்படுத்தி உள்ளார் என்று சொல்லலாம்.
1000 ரூபாய் கிடைக்காதவர்கள், எதிராக திரும்பிவிட்டால், திமுகவின் ஓட்டுவங்கி அடிபடுமே என்ற வருத்தத்தையும், கார்த்தி பதிவு செய்துள்ளதாகவே கருதப்படுகிறது.
காய்நகர்த்தல்: ஆக, திமுகவுக்கு இப்போது சிக்கல் என்னவென்றால், உரிமைத்தொகையை வழங்கியும்கூட கெட்ட பெயருக்கு உள்ளாக வேண்டிவரும்.. வாக்குறுதிகளை நிறைவேற்றியும்கூட, ஓட்டுக்களை பிரதானமாக அள்ள முடியாது. அதனால், இந்த விஷயத்தில் மிகச்சரியான காய்நகர்த்தலை அரசு மேற்கொள்ள வேண்டி உள்ளது..
"எல்லாருக்குமே உரிமைத்தொகையை கிடைப்பதற்கான நிதியை திரட்ட முயற்சி செய்ய வேண்டும்" என்ற கார்த்தி சிதம்பரத்தின் ஆலோசனையையும் தமிழக அரசு பரிசீலித்தால் நல்லா இருக்கும்.. இனி அடுத்து என்ன நடக்க போகிறதென்று தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!!
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications