நடு மண்டைல நெருப்பு பத்திக்கிச்சு.. பயப்படாதீங்க பயப்படாதீங்க.. அடுத்து நடந்ததை பாருங்க!
இளைஞர் ஒருவரின் புது ஹேர் ஸ்டைல் வீடியோ ஒன்றினை கார்த்தி சிதம்பரம் பதிவிட்டுள்ளார்
சென்னை: ஐயோ.. பத்திக்கிச்சு.. பத்திக்கிச்சு.. பாட்டுதான் ஞாபகத்துக்கு வருது. நடுமண்டையில ஒருத்தருக்கு நெருப்பு பத்திக்கிட்டு எரியுது!
அடிக்கடி சீரியஸ் விஷயங்கள் சம்பந்தமாக கார்த்தி சிதம்பரம் ட்வீட் போட்டு வந்தாலும், கலக்கல் வீடியோக்களையும் அடிக்கடி பதிவிடுவார்.

அப்படித்தான் டிக்டாக் வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பதிவில் போட்டுள்ளார். அது ஒரு டிக்டாக் வீடியோ. சென்னையில் ஒரு சலூன் கடையில் ஒரு இளைஞர் முடி வெட்ட உட்கார்ந்திருக்கிறார். அவருக்கு ஏற்கனவே முடி வெட்டப்பட்டுள்ளது. பாதி மண்டையை வழித்து எடுத்து விட்டுள்ளனர். மீதி உள்ள மண்டையில் பட்டை பட்டையாக வகிடுகள், கோடுகள் என ஆங்காங்கே உள்ளன.
முடி வெட்டி முடிக்கப்பட்டு, அந்த இளைஞர் எழுந்து விடுவார் என்று பார்த்தால், திடீரென நடு மண்டையில் குபுகுபுவென தீ பற்றி எரிகிறது. ஃபாஸ்ட் புட்-டில் அதிக நெருப்பில் ஃபிரைட் ரைஸ் செய்வார்களே.. அது மாதிரி நெருப்பு எரியும்போதே, வேகவேகமாக முடியை வாரி ஒரு ஷேப்புக்கு அந்த முடியை கொண்டு வருகிறார் சலூன் கடைக்காரர். இதுதான் ஃபினிஷிங் டச் போல!
This is from Spike a hairdresser in Eldorado, Chennai :) Never seen anything like this! pic.twitter.com/jCZl9SHjCj
— Karti P Chidambaram (@KartiPC) May 10, 2019
தன் தலைமுடி தன் கண் முன்னாடியே பற்றி எரிவதையும் அந்த இளைஞன் கண்ணாடியில் பார்த்து கொள்கிறார். என்ன ஒரு ஆச்சரியம் என்றால், இப்படி நெருப்பு எரிந்தும் ஒரு முடி கூட அந்த இளைஞருக்கு கருகவில்லை.
இந்த வீடியோவை போட்ட கார்த்தி சிதம்பரம் "இப்படி எங்கியுமே நான் பார்த்ததில்லை" என்று தெரிவித்துள்ளார். நாமளும்தான்!
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications