Karthigai Deepam Wishes: கார்த்திகை தீபம் வாழ்த்துக்கள்: உங்கள் சொந்தங்களுக்கு பகிர வேண்டிய வாழ்த்துக்கள்
சென்னை: 2024 கார்த்திகை பண்டிகையை முன்னிட்டு, உங்கள் உறவினர்கள் நண்பர்கள் மற்றும் சொந்தங்களிடம் பகிர வேண்டிய கார்த்திகை தின வாழ்த்து செய்திகள் மற்றும் கவிதைகளை இந்த பக்கத்தில் காணலாம். அசத்தலான கார்த்திகை தின வாழ்த்துக்கள் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளன.
கார்த்திகை தீபம் என்பது கார்த்திகை மாத பெளர்ணமி நாளும், கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த திருக்கார்த்திகை நாளில் தமிழர் தமது இல்லங்களிலும், கோயில்களிலும் பிரகாசமான தீபங்களை ஏற்றி மகிழச்சியாகக் கொண்டாடும் தீபத் திருநாளாகும்.

தமிழர்களின் வாழ்வோடு ஒன்றிய தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைக்கு இணையாக கார்த்திகை தீபம் முக்கியமான பண்டிகை ஆகும். பலர் கார்த்திகை மாதம் முழுக்க விரதம் இருந்து மாத கடைசியில் விரதம் திறக்கும் வழக்கம் உள்ளது.

கார்த்திகை நாளில் கந்த சஷ்டி கவசம் படிப்பது.. நாள் முழுக்க விரதம் இருப்பது.. கடவுளை வழிபடுவது மக்கள் வாழ்க்கையை மாற்றும். பலருக்கும் வாழ்நாள் முழுக்க பலன் கொடுக்கும். நாம் விளக்கு ஏற்றுவதற்காக ஊற்றப்படும் எண்ணெய்யும், அதில் இடப்படும் திரியும் தன்னை கரைத்துக்கொண்டு நமக்கு பிரகாசமான ஒளியைத் தரும் என்ற நம்பிக்கை உள்ளது.

கார்த்திகை மாதம் கருமையான மேகங்களைக் கொண்டு அதிகளவு மழைபொழியும் கார் காலம் ஆகும். இதனால் தமிழர்களின் வாழ்க்கையில் மிக முக்கியமான மாதம் ஆகும் இது. பலர் திருவண்ணாமலைக்கு சென்று தீப ஒளியை தரிசிக்கும் வழக்கம் உண்டு. தமிழ்நாடு முழுக்க பல கோவில்களில்.. முக்கியமாக சிவன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் கூட செய்யப்படும்.

திருக்கார்த்திகை அன்று வீட்டில் உள்ள சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் மாலை வேளையில் வீடுகளின் வெளிப்புறங்களிலும், வீட்டு முற்றத்திலும் விளக்கேற்றி கொண்டாடுவார்கள். இதேபோல மனிதர்களும் தன்னலம் பார்க்காமல் மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதை இந்த கார்த்திகை தீபம் உணர்த்துகிறது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் கார்த்திகை தீப திருவிழா திருத்தேர் வீதி உலாஉள்ளிட்ட பல சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் தமிழ்நாடு முழுக்க உள்ள பல கோவில்களில் நடக்கும்.

இப்படிப்பட்ட மிக முக்கியமான கார்த்திகை பண்டிகையை முன்னிட்டு, உங்கள் உறவினர்கள் நண்பர்கள் மற்றும் சொந்தங்களிடம் பகிர வேண்டிய கார்த்திகை தின வாழ்த்து செய்திகள் மற்றும் கவிதைகளை இந்த பக்கத்தில் காணலாம். எப்போதும் போல சாதாரணமாக Happy Karthigai Wishes என்று அனுப்பாமல்.. இங்கே கொடுக்கப்பட்டுள்ள டிரெண்டிங் புகைப்படங்களை உங்களின் வாட்ஸ் ஆப், பேஸ்புக், இன்ஸ்ட்டா ஸ்டேட்டஸ்களில் வைத்து உங்கள் தீபாவளியை கொண்டாடுங்கள்.

உங்கள் உறவினர்களுக்கு அனுப்பி இந்த சுபயோக தினத்தை கொண்டாடுங்கள். உங்களுக்கும் உங்கள் குடும்பங்களுக்கும் கார்த்திகை தின வாழ்த்துக்கள்!
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications