விஜய்க்கு ரசிகர் கூட்டம் இருக்கு.. ஆனால் திமுகவுடன் தான் காங்கிரஸ் கூட்டணி.. கார்த்தி சிதம்பரம் கறார்
மயிலாடுதுறை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக -பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி மட்டும் பனிப்போர் நடத்தி வருகிறது. காங்கிரஸ் கட்சிக்கு திமுக கெடு விதித்துள்ளது. தவெகவுடன் இணைய வேண்டும் என சிலரும், திமுகவுடன் தொடர வேண்டும் என பலரும் காங்கிரஸ் கட்சியில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இதனால் உச்சகட்ட பரபரப்பு நிலவி வருகிறது. விஜய்க்கு ரசிகர் கூட்டம் இருக்கிறது. ஆனால் திமுகதான் உடன் மட்டும் தான் காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார் [Karthik Chidambaram].

வேறு கட்சியுடன் பேச்சுவார்த்தை
மயிலாடுதுறையில் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "டெல்லியில் என்ன கூட்டம் நடக்கிறது என்பது எனக்கு தெரியாது. நான் இப்போது சீர்காழியில் இருக்கிறேன். எனக்கு எப்படி டெல்லியில் நடக்கும் சம்பவங்கள் தெரியும். திமுகவை தவிர காங்கிரஸ் வேறு எந்தக் கட்சியுடனும் அதிகாரபூர்வமாக பேச்சுவார்த்தை நடத்தவில்லை. சிவபெருமான் என்ன நினைக்கிறாரோ அது நடக்கும்.
விஜய்க்கு ரசிகர் கூட்டம்
விஜய் பிரபலமான நடிகர். அவருக்கு என்று ஒரு ரசிகர் கூட்டம் இருக்கிறது. அந்த ரசிகர் கூட்டம் ஒரு ஆதரவு கூட்டமாக மாறலாம். அந்த ஆதரவு கூட்டம் வாக்கு வங்கியாகவும் மாறலாம். ஆனால் அந்த வாக்கு சீட்டாக மாறுமா என்பது கேள்விக்குறி தான். நான் காங்கிரஸ் பேச்சுவார்த்தைக் குழுவில் இல்லை. எங்கள் கட்சி சார்பில் யார் அதிகாரபூர்வமாக செல்கிறார்களோ அவர்கள் தான் திமுக தலைமையுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்கள்.
திமுக காங்கிரஸ் உடன்பாடு
அதைப்பற்றி நான் எதுவும் பேச முடியாது. திமுக - காங்கிரஸ் பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு எட்டப்படும் என்கிற நம்பிக்கை உள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்த பிறகு மற்றதை பார்த்துக் கொள்ளலாம். திமுக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளும் உடன்பாடு ஏற்பட வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம்.
இந்தியா கூட்டணி
தவெக, சசிகலா, ராமதாஸ், காங்கிரஸ் என கூட்டணி அமைய போவதாக எல்லாம் சொல்வதை பற்றி எனக்கு தெரியாது. காங்கிரஸ் இந்தியா கூட்டணியில் தான் இருக்கிறது. இந்தியா கூட்டணி வலிமையாக இருக்க வேண்டும் என்று தான் நினைக்கிறோம். இந்தக் கூட்டணி தான் வெற்றி பெறும். திமுக தலைமையிலான கூட்டணியில் தான் காங்கிரஸ் கட்சி அதிகாரபூர்வமாக உள்ளது" என்றார்.
-
கடைசி பஸ் பிடிக்க போற மாதிரி அவசரப்பட்டது எல்லாம்.. இதுக்குத்தானா? வேட்பாளரை அறிவிக்காத காங்கிரஸ்! -
கன்னியாகுமரியில் கடன் தந்த வங்கிக்கு ட்விஸ்ட் தந்த காங்கிரஸ் பெண் பிரமுகர்.. பாய்ந்த வழக்கு -
இதென்ன லிஸ்ட்.. வேலைக்கு ஆகாது.. தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை.. விட்டு வீசிய ராகுல் காந்தி -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா?












Click it and Unblock the Notifications