சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நடிகர் விவேக்கின் 1 கோடி மரம் நடும் ஆசையை.. திமுக நிறைவேற்றும்.. கார்த்திகேய சிவசேனாபதி அறிவிப்பு..!

Google Oneindia Tamil News

சென்னை: மறைந்த நடிகர் விவேக் விட்டுச்சென்ற 1 கோடி மரம் நடும் பணியை திமுக மேற்கொள்ளும் என அக்கட்சியின் சுற்றுச்சூழல் அணி மாநிலச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி அறிவித்துள்ளார்.

லட்சக்கணக்கான மரங்கள் நட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றி இளைஞர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திய சிறப்புக்குரியவர் மறைந்த நடிகர் விவேக் என பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

நான் பொதுவாழ்விலிருந்து விலகியதை.. திரும்பப் பெற கேட்டுக்கொண்டவர் விவேக்.. தமிழருவி மணியன் இரங்கல்நான் பொதுவாழ்விலிருந்து விலகியதை.. திரும்பப் பெற கேட்டுக்கொண்டவர் விவேக்.. தமிழருவி மணியன் இரங்கல்

குணச்சித்திர நடிகர்

குணச்சித்திர நடிகர்

நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து தன் நகைச்சுவையால் மக்களைச் சிரிக்க வைத்த, அதன் மூலம் சிந்திக்கவும் வைத்த சிறந்த நகைச்சுவை நடிகரும்,குணச்சித்திர நடிகருமான பத்ம ஸ்ரீ விவேக் மறைவு நமக்கெல்லாம் மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. தனது நகைச்சுவையால் மக்களிடையே இருந்த அறிவியலுக்குப் புறம்பான எண்ணங்கள் குறித்துப் பல வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதன் காரணமாகவே தலைவர் கலைஞர் அவர்களால் "சின்னக் கலைவானார்" என்று அழைக்கப்பட்டார்.

பாராட்டு

பாராட்டு

அதே நேரம் அவர் நடிகர் என்பதைத் தாண்டி தனிப்பட்ட முறையில் எனக்கு நல்ல நண்பராகவும், சுற்றுச்சூழல் முன்னெடுப்புகள் பலவற்றிலும் என்னுடன் துணை நின்றவராகவும் இருந்துள்ளார். மேலும், லட்சக்கணக்கான மரங்கள் நட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றி இளைஞர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திய சிறப்புக்குரியவர்.

1 கோடி மரங்கள்

1 கோடி மரங்கள்

அந்த வகையில், மறைந்த நடிகர் விவேக் 1 கோடி மரங்கள் நடுவதைத் தன் இலட்சியமாக வைத்திருந்தார். அதில் 37 லட்சம் மரக்கன்றுகளை நட்டு பெரும் பணியைச் செய்தும் காட்டியுள்ளார். சுற்றுச்சூழல் நன்மை மீது அளப்பரிய ஆர்வமும் அதையொட்டி பணியாற்றுவதில் மிகுந்த ஈடுபாடும் கொண்டிருந்தார்.

விவேக்கின் ஆசை

விவேக்கின் ஆசை

ஆனால் மரம் நடும் பணியை முழுமை செய்வதற்குள் இயற்கை அவரை எடுத்துக்கொண்டது. ஆனால் அவர் கொண்ட ஓர் உயர்ந்த இலட்சியத்தை நிறைவேற்றுவதே நாம் அவருக்குச் செய்யும் உண்மையான கைமாறாக இருக்கும். எனவே, அவர் நட்ட மரக்கன்றுகளின் மீதி எண்ணிக்கையை நடுவதற்கு நம் கழக சுற்றுச்சூழல் அணியின் சார்பில் முயற்சிகள் மேற்கொள்ளலாம் என்று முடிவெடுத்துள்ளோம்.

ஒன்றிணைந்து

ஒன்றிணைந்து

இந்த நற்செயலில் அவருடன் பயணித்த அவரது நண்பர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களுடன் இணைந்து இது குறித்த செயல்கள் பற்றிக் கலந்தாலோசிக்க இருக்கிறோம். என்றும் போல் மக்களாகிய நீங்கள் தங்கள் நல் ஆதரவைத் தந்து அவர் லட்சியம் நிறைவேறத் துணை நிற்க வேண்டும். விவேக்கின் உயர்ந்த எண்ணத்தை ஒன்றிணைந்து நிறைவேற்றுவோம்."

இவ்வாறு திமுக சுற்றுச்சூழல் அணி மாநிலச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி குறிப்பிட்டுள்ளார்.

English summary
Karthikeya sivasenapathi says, DMK will Continue actor Vivek's 1 crore tree planting project
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X