சிவகங்கையில் திமுகவையே திகைக்க வைத்த கார்த்தி சிதம்பரம்.. அதிமுகவை முந்தும் பாஜக .. தந்தி டிவி சர்வே
சென்னை: சிவகங்கை தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாகவும், பாஜக கூட்டணி வேட்பாளரை விட இங்கு அதிமுக வாக்கு சதவீதம் கடுமையாக குறையும் என்றும் தந்தி டிவி கணித்துள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதில் திமுக காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகள் ஒரு அணியாகவும், பாஜக, பாமக அமமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஒரு அணியாகவும், அதிமுக தேமுதிக உள்ளிட்ட சில கட்சிகள் ஒரு அணியாகவும், நாம் தமிழர் கட்சி தனியாகவும் களத்தில் இறங்கி உள்ளன. நாளை மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது.

பல்வேறு தொலைக்காட்சி நிறுவனங்கள், தனியார் அமைப்புகள் தமிழக தேர்தல் குறித்து கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் இதுவரை வெளிவந்த பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் திமுக கூட்டணியே மொத்தமாக அடித்து தூக்கும் என்றே கூறியுள்ளன. சில கணிப்புகளில் ஒரிரு இடங்களில் பாஜக மற்றும் அதிமுக கூட்டணி வரும் என்று கணித்துள்ளன.
தமிழ்நாட்டின் பிரபல செய்தி ஊடகமான தந்தி டிவி தனது இரண்டாவது கருத்துக்கணிப்பினை இன்று வெளியிட்டுள்ளது. இந்த கணிப்பில் திமுக கூட்டணி வெற்றி பெற அதிக வாய்ப்ப உள்ளதாக கூறியுள்ளது.
தொகுதி வாரியான நிலவரத்தை பொறுத்தவரை இந்த செய்தியில் சிவங்ககை தொகுதி நிலவரத்தை பார்ப்போம்.. சிவகங்கை தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் கடந்த முறையை போல் இந்த முறையும் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் பாஜகவை கடுமையாக விமர்சித்து பிரச்சாரம் செய்து வரும் கார்த்தி சிதம்பரம், நடைபெற உள்ள தேர்தலில் 44 முதல் 50 சதவீதம் வாக்குகள் பெற்று வெற்றி பெறுவார் என தந்தி டிவி கணித்துள்ளது.
அதிமுக சார்பில் போட்டியிடும் சேவியர் தாஸ் 12 முதல் 18 சதவீதம் வாக்குகள் பெறுவார் என்றும், பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் தேவநாதன் யாதவ் 30 முதல் 36 சதவீதம் வாக்குகளை பெறுவார் என்றும், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் எழிலரசி 3 முதல் 6 சதவீதம் வாக்குகள் பெறுவார்கள் என்றும் தந்தி டிவி கணிப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications