அட வடிகட்டுன முட்டாள்களா.. "மைசூர்பாக்" பெயரை ‛மைசூர் ஸ்ரீ' என மாற்றியவரை விளாசிய கார்த்தி சிதம்பரம்
சென்னை: PAk என்பது பாகிஸ்தானை குறிப்பதாக கூறி உலகப்புகழ் பெற்ற ஸ்வீட்டாக இருக்கும் ‛மைசூர்பாக்' பெயரை ‛மைசூர் ஸ்ரீ' என்று மாற்றி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள பேக்கரி கடைக்காரர் விற்பனை செய்து வருகிறார். இது சமூக வலைதளங்களில் விவாதமாகி உள்ளது. ஒரு தரப்பினர் ஆதரவு தெரிவிக்கும் நிலையில் இன்னொரு தரப்பினர் கிண்டல் செய்து வருகின்றனர். இந்நிலையில் தான் சிவகங்கை காங்கிரஸ் எம்பி ‛‛அடவடிகட்டுன முட்டாள்களா'' என்று விமர்சனம் செய்துள்ளார்.
பாகிஸ்தான் தொடர்ந்து பயங்கரவாதிகளை ஆதரித்து வருகிறது. கடந்த மாதம் 22ம் தேதி ‛தி ரெசிஸ்டண்ட் ஃப்ரண்ட்' என்ற பயங்கரவாத அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் பலியாகினர்.

இதற்கு ‛ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் நம் நாடு பதிலடி கொடுத்தது. கடந்த 7 ம் தேதி முதல் 10ம் தேதி வரை பாகிஸ்தான் மீது ஏவுகணைகளை ஏவி அதிரடி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பாகிஸ்தானில் இயங்கிய 9 பயங்கரவாத முகாம்கள், 3 விமானப்படை தளங்கள் அழிக்கப்பட்டன.
நம் நாட்டின் அதிரடி தாக்குதலுக்கு அஞ்சிய பாகிஸ்தான் தாக்குதலை நிறுத்த கெஞ்சியது. இதையடுத்து நம் நாடு தாக்குதலை நிறுத்தியது. தற்போது எல்லையில் அமைதி நிலவினாலும் கூட பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக தொடர்ந்து கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே தான் பாக் (PAK)என்பது பாகிஸ்தானை குறிப்பதாக கூறி பிரபல இனிப்பான ‛மைசூர் பாக்' பெயரை ‛மைசூர் ஸ்ரீ' என மாற்றி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள பேக்கரி கடைக்கார் விற்பனை செய்து வருகிறார். அதுமட்டுமின்றி கோந்த் பாக், மோத்தி பாக், ஆம் பாக் உள்ளிட்டவற்றின் பெயர்களும் கோந்த் ஸ்ரீ, மோத்தி ஸ்ரீ, ஆம் ஸ்ரீ என்று பெயர்களை மாற்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதுதொடர்பான போட்டோக்கள் இணையதளங்களில் வெளியாகின. இதற்கு ஒருதரப்பினர் ஆதரவு தெரிவிக்கும் நிலையில், இன்னொரு தரப்பினர் கிண்டல் செய்து வருகின்றனர். அப்படியென்றால் சேப்பாக்-கை சேஸ்ரீ என்றும் பாக்கியராஜ் என்ற பெயர் கொண்டவரை ஸ்ரீகியராஜ் என்றும் பாக்கியலட்சுமியை ஶ்ரீக்கியலட்சுமி என்றும் மாற்றி விடலாமா என்று நெட்டிசன்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.
அந்த வரிசையில் சிவகங்கை காங்கிரஸ் எம்பி இந்த பெயர் மாற்றத்தை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுபற்றி அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் அட வடிகட்டுன முட்டாள்களா என்று கூறியுள்ளார். அதாவது பாக் என்ற வார்த்தைக்கு பதில் ஸ்ரீ என்ற வார்த்தையை பயன்படுத்தி ‛மைசூர் பாக்' பெயரை ‛மைசூர் ஸ்ரீ' என மாற்றிவர்களை முட்டாள்கள் என்று கூறி உள்ளார்.
உண்மையில் ‛மைசூர்பாக்' என்பதில் உள்ள ‛பாக்' என்பது பாகிஸ்தானை குறிப்பது இல்லை. அதன் பின்னணி அர்த்தம் என்பது வேறு. அதாவது மைசூர் பாக் என்பது கர்நாடகா மாநிலம் மைசூர் அரண்மனையில் முதல் முதலாக தயார் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அது இனிப்பு வகையை சேர்ந்தது. கன்னட மொழியில் இனிப்புக்கு ‛பாகு' என்று பொருள். இதனால் மைசூர் பாகு என்று பெயர் வைக்கப்பட்டது. இது நாளடைவில் மருவி மைசூர் பாக் என்று வந்துவிட்டது. இன்னும் கர்நாடகாவில் மைசூர் பாகு என்று சொல்கின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications