"இதுவா வெளிப்படைத்தன்மை?”.. தவெக அரசுக்கு எதிராக காங்கிரஸ்! RTI தொடர்பான முடிவை வாபஸ் பெற கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: "வெளிப்படைத்தன்மையான அரசு என்றால் தகவல் உரிமைச் சட்டத்தின் எல்லையை விரிவாக்க வேண்டுமே தவிர, கட்டுப்படுத்தக் கூடாது. தவெக அரசு இதனை திரும்பப் பெற வேண்டும்" என காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், தமிழ்நாடு அரசு புதிய அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு அரசின் உளவு மற்றும் பாதுகாப்பு அமைப்பான 'பொது (சட்டம் மற்றும் ஒழுங்கு) துறை'யின் கீழ் வரும் தகவல்கள் இனி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) வரம்பிலிருந்து விலக்களிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

karti chidambaram

கடந்த செப்டம்பர் 21ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ள இந்த உத்தரவின் மூலம், இனி சட்டம் ஒழுங்கு தொடர்பான முக்கிய விவரங்களை ஆர்டிஐ மூலம் கேட்டுப் பெற முடியாது. சாதி மற்றும் சமூக ரீதியிலான மோதல்கள் குறித்த விவரங்கள், காவல் துறை துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் குறித்த விசாரணை அறிக்கைகள், காவல் நிலைய மரணங்கள் & சித்ரவதைகள் உள்ளிட்ட விவரங்களை ஆர்டிஐ மூலம் கேட்டுப்பெற முடியாது.

அதேபோல, மாணவர்கள், விவசாயிகள், அரசியல் கட்சிகள் நடத்திய போராட்டங்கள் தொடர்பான தகவல்கள் மற்றும் அரசியல்/சமூகக் காரணங்களுக்காகப் பதிவு செய்யப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெறுவது தொடர்பான கோரிக்கைகள், அவதூறான கட்டுரைகள், செய்திகள் மற்றும் உரைகள் மீது வழக்குத் தொடர அனுமதி அளிப்பது தொடர்பான ஆவணங்களையும் ஆர்டிஐ மூலம் கேட்டுப்பெற முடியாது.

சாமானிய மக்கள் அரசுத் துறைகளிடம் இருந்து தகவல்களைப் பெற உதவும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் இத்தகைய கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்திருப்பது, அரசின் வெளிப்படைத்தன்மையைப் பாதிக்கும் என்றும், சட்டம் ஒழுங்கு தொடர்பான விமர்சனங்களில் இருந்து தப்பிக்கவே தவெக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து பொது (சட்டம் மற்றும் ஒழுங்கு) துறைக்கு விலக்கு அளிக்கும் தவெக அரசின் நடவடிக்கை ஒரு நல்ல முன்னுதாரணத்தை ஏற்படுத்தவில்லை. இந்தியா முழுவதும் ஜனநாயகப் பொறுப்புடைமையை வலுப்படுத்தும் நோக்கில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் கொண்டுவரப்பட்ட ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுதான் தகவல் அறியும் உரிமைச் சட்டம் என்பதை நினைவுகூர்வது அவசியம்.

காவல்துறை துப்பாக்கிச் சூடு, காவல் மரணங்கள், சித்திரவதை, மற்றும் விசாரணைக் கைதிகளின் மரணங்கள் குறித்த விசாரணை அறிக்கைகளை ஆய்வு செய்தல், பாதுகாப்பு தொடர்பான தடுப்புக் காவல் வழக்குகள், மத மற்றும் சாதி மோதல் அறிக்கைகள், அரசியல் ரீதியாக உணர்திறன் வாய்ந்த வழக்குகளைத் திரும்பப் பெறுவதற்கான கோரிக்கைகள், மற்றும் அவதூறான கட்டுரைகள், செய்திகள் மற்றும் பேச்சுகளுக்கு வழக்குத் தொடர அனுமதிப்பது தொடர்பான விஷயங்கள் போன்ற முக்கிய விஷயங்களை சட்டம் மற்றும் ஒழுங்குத் துறை கையாளுகிறது.

இந்த முக்கியத் தகவல்கள் தற்போது பொதுமக்களிடமிருந்து மறைக்கப்படுகின்றன. இத்தகைய பின்வாங்கல்கள் வெளிப்படையான நிர்வாகத்திற்கு உகந்தவை அல்ல. தகவல் அறியும் உரிமைச் சட்டம் கட்டுப்படுத்தப்படாமல், விரிவுபடுத்தப்பட வேண்டும்." எனத் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+