பாஜக மாநில தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை மாற்றப்படுவது கன்ஃபார்ம்? கரு.நாகராஜன் சொன்ன பதில்!
சென்னை: பாஜக மாநிலத் தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் பரபரத்து வரும் நிலையில், பாஜக மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன் இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ளார்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மாற்றப்பட உள்ளார் என்ற விஷயம் கடந்த சில நாட்களாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பாஜக தலைமை விரும்புகிறது. அதற்காக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை பதவியில் இருந்து மாற்ற பாஜக தேசியத் தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மையில் டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை ஒட்டி அதிமுக - பாஜக கூட்டணி அமைய வேண்டுமெனில் அண்ணாமலை மாற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் எடப்பாடி பழனிசாமி முன்வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த காலங்களில் அண்ணாமலை, அதிமுகவை சீண்டும் வகையில் தொடர்ச்சியாக பேசியது அதிமுக தொண்டர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியது என்றும், இது அடுத்து வரும் தேர்தல் சமயத்திலும் தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தக்கூடும் என்றும் ஈபிஎஸ் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக அண்ணாமலையை டெல்லிக்கு அழைத்து பாஜக தலைமை பேசியுள்ளது. அதன் பிறகு சென்னைக்கு திரும்பிய அண்ணாமலை, சூசகமாக சில விஷயங்களைப் பேசினார். குறிப்பாக, பாஜகவில் மாநிலத் தலைவர் பதவியில் இல்லை என்றாலும் தொண்டனாக பணியாற்றவும் தயார் என்று அண்ணாமலை பேசினார்.
அண்ணாமலைக்கு பதிலாக புதிய மாநிலத் தலைவரை நியமிக்க பாஜக மேலிடம் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருவதாகச் சொல்லப்படுகிறது. புதிய மாநிலத் தலைவருக்கான போட்டியில் பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் முன்னிலையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பெயர்களும் தலைவர் பதவிக்கு பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பாஜக மாநில தலைவர் பதவியிலிருந்து அண்ணாமலை நீக்கப்படுகிறாரா? என பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் விளக்கம் அளித்துள்ளார். ஊடகத்திற்கு பேட்டி அளித்த கரு.நாகராஜன், "3 வருடங்களுக்கு ஒருமுறை மாநிலத் தலைவர்களை மாற்றுவது என்பது பாஜக-வில் வழக்கமான நடைமுறைதான். தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுமைக்கும் இது நடப்பதுதான்.
தேர்தல் காலங்களில் கட்சி நிர்வாகிகள் மாற்றப்படுவது வழக்கம் தான். அண்ணாமலையின் பணி எல்லோருக்கும் தெரியும். அண்ணாமலைக்கு என்ன பொறுப்பு தரவேண்டும் என்பதை தேசிய தலைவர்கள் முடிவு செய்வார்கள். அந்த முடிவை அறிய நாங்களும் ஆவலோடு, ஆர்வத்தோடு காத்திருக்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் இன்று அண்ணாமலை மாற்றம் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்துப் பேசுகையில், "இந்திய மாநிலங்கள் அனைத்திலும் பாஜக மாவட்ட தலைவர்கள் தேர்தல் முடிவுற்று மாநில தலைவர்கள் தேர்தல் தொடங்கியுள்ளது. அதைத் தொடர்ந்து தேசிய தலைவர் தேர்தல் நடத்தப்படும். அதையொட்டியே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மாற்றம் என்ற தகவல் பரவியிருக்கலாம்" என்று தெரிவித்திருந்தார்.
-
விஜய் நிகழ்த்திய தமிழ்நாட்டு மாடல்.. கரப்பான் பூச்சி பார்ட்டியால் நிகழ்ந்தால் பாஜகவிற்கு சிக்கல் -
பெருந்துறை இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டியிடுகிறாரா? பாஜகவில் செல்வாக்கை நிரூபிக்க ஆசிட் டெஸ்ட்? -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
ஏன் பெட்ரோல் விலை 10 நாளில் ரூ.7 உயர்வு? நஷ்டத்தை சொல்லுவீங்களா? மத்திய அரசை சாடிய மாணிக்கம் தாகூர் -
குடிசைகள் இல்லாத நகரமாக மாறும் மும்பை.. 2030 தான் டார்கெட்! ஏக்நாத் ஷிண்டே அறிவிப்பு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு












Click it and Unblock the Notifications