Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விஜயகாந்த் படத் திறப்பு விழா! கீச் கீச் சப்தத்துடன் வானில் நடந்த அதிசயம்.. மெய்சிலிர்த்த தொண்டர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்தின் திருவுருவப்படம் திறப்பு விழாவின் போது கட்சி அலுவலகத்தையே கருடன் சுற்றி வந்த காட்சிகள் மெய்சிலிர்க்க வைக்கின்றன.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் சரியில்லாமல் இருந்தார். இதனால் அவர் கட்சி நிகழ்வுகளில் நேரடியாக கலந்து கொள்ளாமல் ஆலோசனைகளை மட்டுமே வழங்கி வந்தார்.

Karudan circled at DMDK office when Vijayakanths photo unveiled

இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் 18 ஆம் தேதி விஜயகாந்துக்கு காய்ச்சல், சளி, இருமல் இருந்தது. இதையடுத்து அவர் நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் பூரண நலம் பெற்றதாக தெரிவிக்கப்பட்டு வீட்டிற்கு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இதையடுத்து வழக்கமான பரிசோதனைகளுக்காக அவர் மீண்டும் நந்தம்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நிமோனியா காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர் கடந்த ஆண்டு 28ஆம் தேதி காலமானார்.

இந்த நிலையில் அவருடைய உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்தது. அங்கேயே அவரது உடல் அடக்கம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிலையில்தான் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த வந்த கூட்டம் அதிகரித்ததாலும் விஐபிகளால் வந்து செல்ல முடியாத நிலையாலும் விஜயகாந்தின் உடல் தீவுத்திடலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

இதையடுத்து அங்கு ஏராளமானோர் வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தினார்கள். இதையடுத்து அவரது உடல் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. அப்போது ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை அருகே வந்த போது விஜயகாந்தின் உடலை அங்கு வந்த கருடன் 3 முறை சுற்றி வந்தது. இதை பார்த்ததும் பிரேமலதா உள்ளிட்டோர் வணங்கினர்.

மார்கழி மாதத்தில் இறந்த விஜயகாந்தை பெருமாளே சொர்க்கத்திற்கு நேரில் வந்து அழைத்து சென்றதாக சொல்லப்படுகிறது. இது மிகவும் அரிதான நிகழ்வாகும். இந்த நிலையில் விஜயகாந்தின் உடல் கடந்த 29ஆம் தேதி தேமுதிக அலுவலகத்திலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது.

அன்று முதல் இன்று வரை விஜயகாந்தின் நினைவிடத்தில் தொண்டர்களும் ரசிகர்களும் பொதுமக்களும் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த 19 ஆம் தேதி நடிகர் சங்கம் சார்பில் விஜயகாந்துக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடந்தது. அது போல் ஜனவரி 24 ஆம் தேதி புகைப்படம் திறப்பு நடத்த தேமுதிக முடிவு செய்திருந்தது.

அதன்படி நேற்று விஜயகாந்தின் திருவுருவப்படம் திறக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பிரேமலதா விஜயகாந்த், எல்.கே. சுதீஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விஜயகாந்த் பெயரில் அன்னதான அறக்கட்டளை தொடங்கப்பட்டதாகவும் இனி தேமுதிக அலுவலகத்தில் தினமும் அன்னதானம் நடைபெறும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் அங்கு திடீரென கருடன் 3 முறை வட்டமடித்தது. ஏற்கெனவே விஜயகாந்த் ஊர்வலத்தின் போது வட்டமடித்த நிலையில் சப்தம் எழுப்பி கொண்டே மீண்டும் கருடன் வந்ததால் அங்கிருந்த தொண்டர்களுக்கு மெய்சிலிர்த்தது. அவர்கள் ஆனந்த கண்ணீர் விட்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+