புதுப் பொலிவுடன் திமுக அதிகாரப்பூர்வ இணையதளம் DMK.in! கருணாநிதி 100! துவக்கி வைத்த ஸ்டாலின்!
சென்னை: கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை ஒட்டி திமுகவின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கமான DMK.in என்ற முகவரி புது பொலிவுடன் புதிய பரிணாமத்துடன் மெருகூட்டப்பட்டுள்ளது. இதனை முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின் இன்று காலை தொடங்கி வைத்தார்.

DMK.in என்ற திமுக இணையதளத்தில் அண்மை நிகழ்வுகள், திராவிட மாடல், சாதனைகள், கொள்கைகள், வரலாறு, மக்கள் பிரதிநிதிகள் என ஏராளமான பிரிவுகள் உள்ளன. அதேபோல் திமுக வெளியீடுகள், தேர்தல் அறிக்கைகள், கருணாநிதி வரலாறு என இன்னும் பல பிரிவுகள் இதில் இடம்பெற்றுள்ளன.

அதேபோல் அரசு சார்ந்த அறிவிப்புகள், புகைப்படங்கள், அறிக்கைகளும் திமுக இனையதளப் பக்கத்தில் இடம்பெறும் வகையில் புதிதாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன. உழைப்பு, உழைப்பு, உழைப்பு, அதுவே நம் தளபதி என்ற வாசகமும் இந்த இணையதளப் பக்கத்தில் இடம்பெற்றிருக்கின்றன

சென்னை, ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள முதலமைச்சரின் இல்லத்தில் வைத்தே இந்த இணையதளம் தொடங்கி வைக்கப்பட்டது. இது குறித்து முதல்வர் ஸ்டாலின் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது;
இயக்க வரலாறு, அண்மை நிகழ்வுகள், நமது சாதனைகள் என இன்னும் பல தகவற்புதையல்கள் நிறைந்த, புதுப்பொலிவூட்டப்பட்ட https://t.co/AtLU4rIIQU கழக வலைத்தளத்தைக் #கலைஞர்100 கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இன்று தொடங்கி வைத்தேன்.
— M.K.Stalin (@mkstalin) June 10, 2023
கையெழுத்துப் பிரதி இதழ்கள் முதல் கணினி வரை கழகம் கடந்த வந்த நீண்ட… pic.twitter.com/LRKRZqbMUG
''இயக்க வரலாறு, அண்மை நிகழ்வுகள், நமது சாதனைகள் என இன்னும் பல தகவற்புதையல்கள் நிறைந்த, புதுப்பொலிவூட்டப்பட்ட DMK.in கழக வலைத்தளத்தைக் #கலைஞர்100 கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இன்று தொடங்கி வைத்தேன். கையெழுத்துப் பிரதி இதழ்கள் முதல் கணினி வரை கழகம் கடந்த வந்த நீண்ட பயணத்தை தலைமுறைகள் தாண்டியும் அறியச் செய்வோம்.'' இவ்வாறு கூறியுள்ளார்.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்! -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்!












Click it and Unblock the Notifications