கருணாநிதி 101-வது பிறந்த நாள்.. மெரினா நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதியின் 101ஆவது பிறந்த நாளான இன்று மெரினா கடற்கரையில் உள்ள நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் தவிர்க்கவே முடியாத தலைவர் என்றால் அது கருணாநிதி... திமுக தலைவராக சுமார் அரை நூற்றாண்டு இருந்த இவர், சுமார் 18 ஆண்டுகள் தமிழக முதல்வராகவும் இருந்துள்ளார்.

Karunanidhi dmk M K Stalin

இவர் தமிழக முதல்வராக இருந்த போது தான் மாநிலத்தில் பல முக்கிய திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. தமிழ்நாடு இந்தளவுக்கு வளர்ந்துள்ளது என்றால் அதில் கருணாநிதிக்கு முக்கிய பங்கு இருக்கிறது என்பதை யாராலும் மறுக்கவே முடியாது.

கருணாநிதி: கருணாநிதியின் 101ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. வழக்கமாகக் கருணாநிதி பிறந்த நாளை திமுகவினர் வெகு சிறப்பாகக் கொண்டாடுவார்கள். ஆனால், இந்த முறை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் பெரியளவில் கொண்டாட்டங்கள் இருக்காது என சொல்லப்படுகிறது.

திமுக: கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு மெரினா கடற்கரையில் உள்ள நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் காலை 9 மணிக்குச் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். முதலில் மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்திய முதல்வர் ஸ்டாலின், தொடர்ந்து கருணாநிதி நினைவிடத்திலும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அப்போது அவருடன் திமுக மூத்த தலைவர்கள் துரைமுருகன், ஆ ராசா உடன் இருந்தனர். மேலும், திமுக எம்பி கனிமொழி, அமைச்சர்கள் உதயநிதி, கே என் நேரு, பொன்முடி, சேகர்பாபு ஆகியோரும் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

இதை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் சென்னை அண்ணாசாலை ஓமந்தூரார் வளாகம், கோடம்பாக்கம் முரசொலி வளாகத்தில் அமைந்துள்ள கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளதாக திமுக தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+