தமிழகத்தின் நிரந்தர தலைப்புச் செய்தி! கருணாநிதி பிறந்தநாள்.. பிரபலங்கள் வாழ்த்து! #HBDKalaignar96
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் 96வது பிறந்தநாளை முன்னிட்டு பிரபலங்கள் தங்களின் டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மறைந்த திமுக தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி சமூக வலைதளங்களில் #HBDKalaignar96 என்ற ஹேஷ்டேக் ட்ரென்ட்டாகியுள்ளது.
கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு டிவிட்டர் பக்கத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு, திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன், திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் கருணாநிதிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
|
நிரந்தர உயிர்ப்புச் செய்தி
தமிழகத்தின் நிரந்தர தலைப்புச் செய்தி; இன்று நிரந்தர உயிர்ப்புச் சக்தி!
தலைவரே! உங்கள் பிறந்தநாள், இன்பத் தமிழினத்தின் பிறந்தநாள். நீங்கள் இருந்து சாதிக்க வேண்டியதை நாங்கள் நிறைவேற்றிக்காட்ட உறுதி எடுக்கும் நாள். எங்களை வாழ்த்துங்கள்! கலைஞருக்கு புகழ் பெரு வணக்கம்!
|
மிஸ் பண்றேன் அப்பா
நீங்கள் எங்கள் வாழ்வில் ஒரு பகுதியாக தொடர வேண்டும்.. நீங்கள் எப்போதும் எங்கள் வாழ்வில் ஒரு பகுதியாக இருப்பீர்கள்.. நீங்கள் இந்த மண்ணையும் லட்சக்கணக்கான மக்களையும் வளப்படுத்தியுள்ளீர்கள்.. உங்களை மிஸ் செய்கிறேன் அப்பா..
|
மலர் தூவி மரியாதை
ஜூன் 3 - தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களின் 96வது பிறந்தநாளினை முன்னிட்டு சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திருவுருவச் சிலைக்கு கழகத் தலைவர் தளபதி @mkstalin அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தியபோது... என ஜெ அன்பழகன் தனது டிவிட்டர் பக்கத்தில் கருணாநிதியின் பிறந்த நாள் குறித்து செய்தி வெளியிட்டுள்ளார்.
|
மூவேந்தே உன் புகழ் ஓங்குக..
முத்தமிழே நீ வாழ்க!!
மூவேந்தே உன் புகழ் ஓங்குக!!
— T R B Rajaa (@TRBRajaa) June 3, 2019 |
டிஆர்பி ராஜா
கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு திமுக சட்டசபை உறுப்பினரான டிஆர்பி ராஜா நியூ புரொபைல் பிக் என பதிவிட்டு கருணாநிதியுடன் இருக்கும் புகைப்படத்தை தனது புரொபைல் படமாக வைத்துள்ளார்.
|
கலைஞர் புகழ் ஓங்குக
தலைவர் கலைஞரின் பிறந்தநாள் இந்த நாள். விடுதலையை விரும்புகிறவர்களுக்கெல்லாம் சிறந்தநாள் இந்தநாள் , அந்தநாளில் அவர் நடந்த பாதையில் பயணித்ததால் கிடைத்தது வெற்றி. வெற்றியை நோக்கி பயணம் படுகிறபொழுதெல்லாம் கலைஞரும் நம்மோடு பயணிக்கிறார். கலைஞர் புகழ் ஓங்குக!
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications