கருணாநிதியை யாராலும் வரலாற்றில் அசைக்க முடியாது.. திமுகன்னாலே விஜய்க்கு பயம்: எகிறியடித்த அய்யநாதன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் திமுகவை வீழ்த்துவது என்பது சாதாரண நிகழ்வு கிடையாது... திமுகவை பார்த்து பயப்படுவதால்தான் கல்லெறிந்து கொண்டே இருக்கிறார்கள் என்று மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் கருத்து தெரிவித்துள்ளார்.. அத்துடன் தவெக அரசியல் குறித்தும் கடுமையாக விமர்சித்து பேட்டி ஒன்றை தந்துள்ளார்.

தமிழ் நிறம் சேனலுக்கு பேட்டி தந்துள்ள அய்யநாதன், "தாராபுரத்தில் விஜய் ஃபயர் விட்டாரு, செமயா பேசிட்டாரு என்றெல்லாம் எல்லாரும் வைப் பண்ணிட்டு இருக்காங்க. ஆனா அங்கே என்ன பெரிதாக நடந்துவிட்டது? வேட்பாளர் அழுதார், இவர் தேற்றினார்.. பிறகு தவெக என்பது பாஜகவின் கிளையாக ஆரம்பிக்கப்பட்டது என்ற உண்மையை சொல்லிவிட்டார்..

Stalin TVK Vijay M K Stalin

ஒரு மாநிலத்தினுடைய ஏர்போர்ட்டை தூக்கி, ஒரு பிரைவேட் நபரிடம் கொடுக்கணுமா? இங்கே வேலை செய்ய ஆளில்லாத மாதிரி, உத்தரப்பிரதேசத்துக்கு டெண்டர் விட்டுள்ளார்..

விஷ்ணு ரெட்டி, ஜான் ஆரோக்கியசாமி

தனியார் மயமாக்கலுக்கு எதிராக போராடுவேன் என்று சொல்லிட்டு, இப்போது அதே மாதிரி டெண்டர் விடுகிறார்.. சேலத்தில் குடிநீரையும் தூக்கி கொடுத்துட்டாரு. விஷ்ணு ரெட்டி, ஜான் ஆரோக்கியசாமி போன்றோர்களுடன் சேர்ந்து தமிழ்நாட்டை வளர்க்க போறாங்களாம். ,ஜோசியரை நம்பி 1ம் தேதி தண்ணீரைத் திறந்துவிட்டுட்டு, இப்போ கால்வாயெல்லாம் காய்ந்து கிடக்கின்றன.

கட்சி மாறிய பெண் வேட்பாளரிடம், அந்த தொகுதியிலுள்ள தொண்டர்கள் கேள்வி கேட்கிறார்கள்.. ஆனால் பதில் சொல்லாமல், மாடியில் நின்று அழுகிறார்.. இது ஏற்கனவே வேலூரில் விஜய் அழுததுடைய தொடர்ச்சிதான். விஜய்க்கு ஆட்சி நடத்தத் தெரியவில்லை.. ஸ்டாலின் நடிக்கிறதாக விஜய் சொல்கிறார்.. ஆனால் ஸ்டாலினுக்கு மட்டும் நடிக்க தெரிந்திருந்தால், தவெகவை அன்றைக்கே காலி செய்துட்டு போயிருப்பார்.

கலைஞர் கருணாநிதி

எம்ஜிஆர், ஜெயலலிதாவும் நேர்த்தியான அரசியல் செய்தார்கள் என்று விஜய் நினைக்கிறாரே, அது அறியாமையை காட்டுகிறது.. எம்ஜிஆர் காலத்திலேயும், ஜெயலலிதா காலத்திலேயும் தமிழ்நாடு எப்படி இருந்தது என்று கூகுளில் பார்த்தாலே தெரியும்.. கலைஞர் ஆட்சிக்காலத்தில் எப்படி இருந்தது தமிழ்நாடு? என்பதையும் கூகுளில் தேடிப்பாருங்கள்.. அப்போதுதான் உங்களுக்கு வித்தியாசம் தெரியும்..

எம்ஜிஆர் அன்று திமுகவை திட்டினார், ஜெயலலிதாவும் திமுகவை திட்டினார், இப்போது விஜய்யும் திட்டுகிறார்.. உடனே அவர்களின் வாரிசு தான் தான் என்கிறார் விஜய். இதெல்லாம் கேட்கவே காமெடியாக உள்ளது.
திமுகவை பார்த்து பயம்

தமிழகத்தில் திமுகவை வீழ்த்துவது என்பது சாதாரண நிகழ்வு கிடையாது... திமுகவை பார்த்து பயப்படுவதால்தான் கல்லெறிந்து கொண்டே இருக்கிறார்கள்..

ராஜீவ் காந்தி படுகொலை, எம்ஜிஆர் மற்றும் இந்திரா காந்தி மறைவு போன்ற எதிர்பாராத அனுதாப அலைகளின் போர்தான் மாற்றங்கள் ஏற்பட்டன.. எம்ஜிஆர் காலத்து உள்ளாட்சித் தேர்தல்களில்கூட திமுக அமோக வெற்றி பெற்றது.. திமுகவிற்கு எதிராக வலுவான மாற்றுக்கொள்கைகள் எப்போதுமே இருந்ததில்லை. கருணாநிதி மாதிரி ஒரு மிஷனரியை இந்தியாவிலேயே பார்க்க முடியாது. அவரை வரலாற்றில் எவராலும் ஒன்றும் செய்ய முடியாது.

விஜய் தரப்பினர் பணம் கொடுக்காமல் தேர்தலில் வெற்றி பெற்றதாக சொல்வது ஏற்க முடியாது.. உண்மையாகவே விஜய் அலை வீசியிருந்தால் அவர் 107 தொகுதிகளுடன் நின்றுவிடாமல் 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருக்க வேண்டுமே?" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+