கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் லிஸ்ட்! ஓர் ஆண்டுக்கான நிகழ்ச்சிகளை ஷெட்யூல் செய்த திமுக!
சென்னை: கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை ஆண்டு முழுவதும் கொண்டாட திட்டமிட்டுள்ள திமுக தலைமை, அடுத்த ஓர் ஆண்டுக்கான நிகழ்ச்சிகளை நேற்றைய தினம் ஷெட்யூல் செய்துள்ளது.
கலை இரவு, திரைக்கலைஞர்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சி, மீண்டும் கல்லூரிகளில் தமிழ்நாடு மாணவர் மன்றம், என லிஸ்ட் பெரிதாக உள்ளது. இதனிடையே அந்த விவரம் பின்வருமாறு;
*மாணவர்களிடையே "வினாடி - வினா" போட்டிகள்
இப்போட்டிகளில் பங்கு பெறுவோர் அதற்கான செயலியில் (App) தங்கள் பெயரை பதிவு செய்திட வேண்டும்.

முதல் கட்டம்: மாவட்ட வாரியான போட்டிகள்
இரண்டாவது கட்டம் : மண்டல வாரியான போட்டிகள்
மூன்றாவது கட்டம்: மாநில அளவிலான போட்டிகள்
*கவியரங்கம், கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி
*கலை இரவு (தலைவர் கலைஞர் சார்ந்த கலை நிகழ்ச்சிகள்)
*'கலைஞர் சுடர்' ஏந்தி, கலைஞர் கோட்டம் வரை தொடர் ஓட்டம்
*மாவட்ட வாரியாக 'மாரத்தான் தொடர் ஓட்டம்' மாவட்ட வாரியாக விளையாட்டுப் போட்டிகள்.
*கலைஞர் எழுதிய திரைப்பட வசனங்கள் ஒப்பித்தல்
*தலைவர் கலைஞர் குறித்த நிகழ்வுகளையும் - தகவல்களையும் சமூக வலைதளங்களில் Reels தயாரித்து ஆண்டு முழுவதும் வெளியிடுதல்.
*தொழிற் சங்கத்தின் சார்பில் நிகழ்ச்சிகள்
*சட்டத்துறை சார்பில் பேச்சுப் போட்டிகள் -தலைப்புகள்: 'மாநில சுயாட்சி', 'அரசியல் சட்ட மாண்புகளை காப்போம்'
*மகளிர் அணியின் சார்பில் "Podcast".
*கழகச் சொற்பொழிவாளர்களைக் கொண்டு கவியரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம்
*Symposium in English (ஆங்கில கருத்தரங்கங்கள்)
*கூட்டணிக் கட்சி சொற்பொழிவாளர்களை கொண்டு, மாவட்ட அளவில்"கருத்தரங்கங்கள்".
*தலைவர் கலைஞர் அவர்களின் இலக்கியங்கள் குறித்து தமிழறிஞர்கள் கலந்து கொள்ளும் "ஆய்வரங்கங்கள்".
*கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவின்போது திரைத் துறைக் கலைஞர்கள் கலந்து கொள்ளும் "கலை நிகழ்ச்சி".
* திருநங்கைகள் - மாற்றுத் திறனாளிகள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள்.
*அனைத்து நிகழ்ச்சிகளையும் சமூக வலைதளத்தில் பகிர்தல்.
*கல்லூரிகளில் கலைஞர் பிறந்த நாள் நிகழ்ச்சிகள்.
*தலைவர் கலைஞரின் படைப்புகள் குறித்து கல்வியாளர்கள் பங்கேற்கும்.
*கழக மாவட்டங்கள் அனைத்திலும் மூன்று மாதத்திற்கு ஒருமுறை கழகச் சொற்பொழிவாளர்கள் கலந்துகொள்ளும் பொதுக்கூட்டங்கள்
*மாவட்டந்தோறும் திரைப்படக் கலைஞர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள்/ கருத்தரங்குகள்.
*மாவட்ட தலைநகரங்களில் "புகைப்பட கண்காட்சி".
*அயலக அணியின் சார்பில் தமிழர்கள் வாழும் வெளிநாடுகளில் கருத்தரங்கம்.
*மகளிர் அணியின் சார்பில் மாவட்டந்தோறும் கருத்தரங்கங்கள், கலை நிகழ்ச்சிகள்.
*'தேதி சொல்லும் சேதி' வரலாற்று குறிப்புகள் அடங்கிய நூல் வெளியீடு.
*கலைஞர் நூற்றாண்டில் அவர் நடத்திய தமிழ்நாடு மாணவர் மன்றம் மீண்டும் உருவாக்கப்பட்டு கல்லூரிகளில் தனி அமைப்பாகச் செயல்பட ஏற்பாடு.
*மாவட்ட வாரியாக பேச்சுப் போட்டி நடத்தி மாநில அளவில் சிறந்த 100 பேச்சாளர்களைக் கண்டறிந்து கழக சொற்பொழிவாளர்களாக மாற்றுதல்.
*மண்டல வாரியாக பேச்சாளர்களுக்கான ஒரு நாள் பயிலரங்கு.
*கலைஞர் ஆட்சிக்காலத்தில் உருவாக்கிய இடங்களான கல்லூரிகள், பேருந்து நிலையங்கள், பள்ளிக்கூடங்கள், சமத்துவபுரங்கள் ஆகியவற்றை மக்களுக்கு நினைவூட்டும் வகையில் அந்த இடங்களில் நிகழ்ச்சிகள்.
*"கலைஞர் 100" என்ற பெயரில் பேஸ்புக், ட்விட்டர், யூட்யூப் பக்கங்களைத் தொடங்கி பரப்புதல்.
*கலைஞரின் முக்கியமான படைப்புகளை மாணவர்களுக்கு பரிசாக வழங்கிட ஏற்பாடு.
*மகளிர் அணியின் சார்பில் "கலைஞரும், மகளிர் மேம்பாடும்" எனும் தலைப்பில் 'பயிற்சிப் பாசறைகள் மற்றும் பயிலரங்கங்கள்".
*தலைவர் கலைஞர் அவர்கள் திரைக்கதை வசனம் எழுதிய திரைப்படங்களை மாவட்டந்தோறும் காட்சிப்படுத்துதல்.
-
ஸ்டாலின் வீசிய பிரம்மாஸ்திரம்.. கூட்டணி கட்சிகளுக்கு குறைவாக சீட் தந்து சமாளித்தது எப்படி? பின்னணி -
175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டி! திமுக கூட்டணியில் எந்த கட்சிக்கு எத்தனை சீட்? லிஸ்ட்! -
DMK - DMDK: திமுக - தேமுதிக தொகுதி பங்கீடு.. 10 இடங்கள் ஒதுக்கீடு! கூட்டணியில் 2வது பெரிய கட்சியானது -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
விருகம்பாக்கம், விருதுநகர்.. தேமுதிக போட்டியிட விரும்பும் 10 தொகுதிகள் எது? பூரிப்புடன் சொன்ன பிரேமலதா -
கலைஞர் மகள் கனிமொழிக்கே சீட் இல்லை.. உதயநிதிக்கும் சிக்கல் வரும்னு பயம்! விளாசிய நாம் தமிழர் சீமான்! -
நம்பி நம்பி.. வெம்பி வெம்பி.. அல்வா போல அள்ளிட்டுப் போன அண்ணியார்! வேதனையில் திருமா எடுத்த முடிவு! -
மாப்ள எடப்பாடி தான்.. ஆனா சட்டை அமித் ஷாவோடது! ’ஷா’ அசைவுக்கு ஆடும் பழனிசாமி! போட்டுத் தாக்கிய ஐபி! -
துண்டு துண்டாக உடைகிறதா திமுக ஓட்டு? சென்னை வேளச்சேரி தவெக விஜய் 18% வாக்குகளா? ஷாக் பாயிண்ட் -
சிந்தாமல் சிதறாமல் அள்ள வேண்டும்.. ஸ்மார்ட்டாக காய் நகர்த்திய ஸ்டாலின்.. என்டிஏ கூட்டணிக்கு சேதாரம் -
0.43% பிரேமலதாவுக்கு 10+1..3% கமலுக்கு 0! இன்னொரு மதிமுக மநீம? நீங்க சினிமாவுக்கே போயிருங்க ஆண்டவரே! -
ஸ்பெக்ட்ரம் ஊழல் புகார்.. லத்திகா சரண் சர்ச்சை?: எதிர்க்கட்சி தகுதி இழந்த திமுக - 2011ல் ஜெ ஆட்சி!












Click it and Unblock the Notifications