ஒடிசா விபத்தால் ஒத்திவைக்கப்பட்ட கருணாநிதி 100 பொதுக்கூட்டம் ஜூன் 7ல் நடைபெறும்.. திமுக அறிவிப்பு!
சென்னை: ஒடிசா ரயில் விபத்து காரணமாக ஒத்திவைக்கப்பட்ட கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் ஜூன் 7ஆம் தேதி நடைபெறும் என திமுக தலைமை அறிவித்துள்ளது. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தலைவர்கள் பங்கேற்கும் இந்த பொதுக்கூட்டம் வடசென்னை புளியந்தோப்பு பகுதியில் நடைபெறுகிறது.
நேற்று வடசென்னையில் நடைபெறுவதாக இருந்த கூட்டணித் தலைவர்கள் பங்கேற்கும் கருணாநிதி நூற்றாண்டு விழா தொடக்கப் பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டது. கருணாநிதியின் 100-ஆவது பிறந்தநாள் தொடர்பாக நேற்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட நிகழ்ச்சிகள் - பொதுக்கூட்டங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.

கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயில் உள்ளிட்ட 3 ரயில்கள் ஒடிசா மாநிலத்தின் பாலசோர் மாவட்டம் அருகே விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த நிலையில், இந்த சோகமான சூழலில் கருணாநிதி நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகளை நடத்த வேண்டாம் என திமுக தலைமை முடிவு செய்தது.
இத்தகைய சோகமான சூழ்நிலையில், தன் வாழ்நாள் முழுவதும் ஏழை எளியவர்களுக்காகவும், மனித உரிமைகளுக்காகவும், மனித நேயத்திற்காகவும் உரக்கக் குரல் எழுப்பிப் பாடுபட்ட முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் கொண்டாட்டங்களை நடத்துவது சரியல்ல என்று திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் முடிவு செய்தார்.
இதையடுத்து, கருணாநிதி பிறந்தநாள் சிறப்பு நிகழ்வுகள், வடசென்னையில் நடைபெற இருந்த பொதுக்கூட்டம் ஆகியவை ரத்து செய்யப்பட்ட நிலையில், ஒடிசா ரயில் விபத்து காரணமாக ஒத்திவைக்கப்பட்ட கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் ஜூன் 7ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications