சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு தினம்.. வங்க கடல் போல அலங்கரிக்கப்பட்ட நினைவிடம்

Google Oneindia Tamil News

சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு தினத்தை முன்னிட்டு அவரின் நினைவிடத்தில் வங்கக்கடல் போன்று அலங்கரிப்பு செய்யப்பட்டு உள்ளது.

Recommended Video

    4வது ஆண்டு நினைவு நாளையொட்டி இதய வடிவில் அலங்கரிக்கப்பட்டுள்ள கலைஞரின் இல்லம்

    தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இது அவரின் 4வது நினைவு தினம் ஆகும்.

     Karunanidhi Memorial decorated as the Bay of Bengal on his anniversary

    காவிரி மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த கருணாநிதி 2018 ஆகஸ்ட் 7ம் தேதி அன்று காலமானார். இன்று அவரின் நினைவு தினத்தை முன்னிட்டு, திருவாரூரில் கருணாநிதி இல்லம் மலர்களால் இதய வடிவில் அலங்கரிப்பு செய்யப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு முழுக்க இருக்கும் கருணாநிதியின் சிலைகள் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டுள்ளது. அதேபோல் ஊர்களில் இருக்கும் திமுக கட்சி கொடிகள் முன் கருணாநிதி புகைப்படம் வைக்கப்பட்டு மலர் தூவப்பட்டு, அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது.

    அதேபோல் அவரின் நினைவிடத்தில் வங்கக்கடல் போன்று அலங்கரிப்பு செய்யப்பட்டு உள்ளது. நீல நிறத்தில் கடல் அலைகள் இருப்பது போன்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வங்கக்கடல் தாலாட்டும் சங்கத்தமிழை போற்றுவோம் என்ற வாசகம் இதில் இடம்பெற்று உள்ளது.

    பொதுவாக தமிழ்நாட்டில் ஏதாவது விழா நடந்தால், அல்லது திமுக தொடர்பான நிகழ்வுகள் வந்தால் இவரின் சமாதி அலங்காரம் செய்யப்படுவது வழக்கம். செஸ் ஒலிம்பியாட்டை முன்னிட்டு சமீபத்தில் இவரின் சமாதி செஸ் போர்ட் போல அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தற்போது அவரின் நினைவிடத்தில் வங்கக்கடல் போன்று அலங்கரிப்பு செய்யப்பட்டு உள்ளது.

    கருணாநிதியின் பேனாவை மெரினா வங்கக்கடலில் சிலையாக அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மெரினாவில் கூவம் ஆற்றின் முகத்துவாரத்திற்கு மிக அருகில் இந்த நினைவுச்சின்னம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது கூவம் ஆறு கடலில் கடக்கும் இடத்திற்கு அருகில் பேனா நினைவுச்சின்னம் அமையவுள்ளது. இங்கே அதிக மணல் உள்ளதாலும், தரை வலுவாக இருப்பதாலும், எளிதாக கட்டுமானம் மேற்கொள்ள முடியும். கரையில் இருந்து 360 மீட்டர் தூரத்தில் இந்த சிலை வைக்கப்பட உள்ளது. கருணாநிதி நினைவிடத்தில் இருந்து 650 மீட்டர் தூரத்தில் இது கட்டப்பட உள்ளது.

    இந்த நிலையில்தான் தற்போது அவரின் நினைவிடத்தில் வங்கக்கடல் போன்று அலங்கரிப்பு செய்யப்பட்டு உள்ளது.

    English summary
    Karunanidhi Memorial decorated as the Bay of Bengal on his anniversary . முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு தினத்தை முன்னிட்டு அவரின் நினைவிடத்தில் வங்கக்கடல் போன்று அலங்கரிப்பு செய்யப்பட்டு உள்ளது.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X