சென்னை மெரினாவில் கருணாநிதி நினைவிடம் பிப்ரவரி 26ஆம் தேதி திறப்பு.. முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு
சென்னை: சென்னை மெரினாவில் புனரமைக்கப்பட்ட முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடம் வரும் 26ஆம் தேதி மாலை திறக்கப்படுகிறது.
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி உடல்நல பாதிப்பால் காலமானார். இதையடுத்து அவரது உடலை நல்லடக்கம் செய்ய அப்போதைய அதிமுக அரசிடம் மெரினாவில் இடம் கேட்கப்பட்டது.

அதற்கு அதிமுக மறுத்துவிட்ட நிலையில் திமுக ஹைகோர்ட்டை நாடியது. இதையடுத்து கருணாநிதியை மெரினாவில் அடக்கம் செய்ய ஹைகோர்ட் உத்தரவிட்டதை அடுத்து பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த அவரது உடல் ராஜாஜி ஹாலில் இருந்து சென்னை மெரினாவுக்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.
இதையடுத்து அங்கு முழு அரசு மரியாதையுடன் அவருடைய முன்னாள் முதல்வர் அண்ணா சமாதிக்கு அருகே இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து 2021 ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டசபை தேர்தலில் திமுக ஆட்சியை பிடித்தது.

அப்போது கருணாநிதி அடக்கம் செய்யப்பட்ட மெரினாவில் அவருக்கு நினைவிடம் கட்டப்படும் என முதல்வர் ஸ்டாலின் சட்டவிதி எண் 110இன் கீழ் அறிவித்திருந்தார். அதன்படி தமிழக அரசு சார்பில் 2,21 ஏக்கர் பரப்பளவில் ரூ 39 கோடியில் இந்த நினைவிடம் அமைக்கப்பட்டது.
இது புதிய நினைவிடம் அல்ல, ஏற்கெனவே இருந்த நினைவிடம் புனரமைக்கப்பட்டு வரும் திங்கள்கிழமை திறக்கப்படுகிறது. கருணாநிதி நினைவிடத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications