சண்முகநாதன் உடல் தகனம்.. இறுதி ஊர்வலத்தில் நடந்தே வந்து அஞ்சலி செலுத்திய முதல்வர் ஸ்டாலின்!
சென்னை: முன்னாள் முதல்வரும் மறைந்த திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் நேற்று உடல்நலக்குறைவால் காலமானார். கருணாநிதியின் நிழல் என்று குறிப்பிடும் அளவுக்கு அவருடன் நெருக்கமாக இருந்த சண்முகநாதன் மறைவால் தி.மு.க தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் துடித்துபோய் விட்டார் என்றே சொல்ல வேண்டும்.
சண்முகநாதன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உருக்கமுடன் இரங்கல் தெரிவித்தார். ''சண்முகநாதன் மறைவுச் செய்தி எனக்குத் தீராத மனத்துயரத்தை ஏற்படுத்திவிட்டது.

உரிமையோடு சொன்னார்
நேற்று நான் அவரைக் காவேரி மருத்துவமனையில் நேரில் சென்று சந்தித்தபோது, "அடிக்கடி என்னை எதற்காக வந்து சந்திக்கிறாய்? நீ உனது பணிகளைக் கவனி" என்று உரிமையோடு சொன்னார். அத்தகைய அன்புள்ளத்தை இவ்வளவு சீக்கிரமாக இழப்போம் என்று நான் நினைக்கவில்லை'' என்று ஸ்டாலின் தெரிவித்தார்.

உருக்கமுடன் இரங்கல்
''அண்ணன் என்ற உறவையும் தாண்டி, அவரை எனது உயிராகத்தான் நான் கருதி வந்தேன். எப்போது எந்தக் கூட்டத்தில் நான் பேசினாலும், பேசி முடித்ததும் அவருக்குத் தொலைபேசியில் தொடர்பு கொள்வேன். 'நேரலை பார்த்தீங்களா?' என்று அவரது கருத்தைக் கேட்பேன். அவர் பாராட்டுவார், திருத்தம் சொல்வார், உற்சாகப்படுத்துவார்'' என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்ணீர்மல்க கூறினார்.

ராசாத்தி அம்மாள்
தேனாம்பேட்டையில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டு இருந்த சண்முகநாதன் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டு முறை கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினார். மிகுந்த சோகத்தில் வெகு நேரமாக முதல்வர் ஸ்டாலின் அங்கேயே உட்கார்ந்து இருந்தார். மேலும், சண்முகநாதன் உடலுக்கு ராசாத்தி அம்மாள், தமிழக மூத்த அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள், எம்.பி, எம்.எல்.ஏக்கள் பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் உள்பட பலரும் அவர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

இறுதி மரியாதை
இந்த நிலையில் சண்முகநாதனின் உடல் சென்னை மயிலாப்பூரில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக அவரது திருவுடல் வீட்டில் இருந்து மயானத்துக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. இந்த இறுதி ஊர்வலத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். மூத்த அமைச்சர்களுடன் இறுதி ஊர்வலத்தில் நடந்தே வந்த முதல்வர் ஸ்டாலின் சண்முகநாதனின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினார்.
-
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
கிங்-கும் இல்லை.. கிங் மேக்கரும் இல்லை.. விஜய் ‘ஜஸ்ட்’ ஒரு சத்தமா? ஸ்டாலின் ‘ரிப்பீட்’.. தவெக ஷாக் -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
திமுக விட்டுக் கொடுத்துள்ளதால்.. நாங்களும் இறங்கினோம்.. மனம் திறந்த திருமாவளவன் -
175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டி! திமுக கூட்டணியில் எந்த கட்சிக்கு எத்தனை சீட்? லிஸ்ட்! -
66/234! விசிக கேட்ட 10+1 தேமுதிகவுக்கு! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை சீட்! DMK-க்கு 166-ஆ? -
தலித்துகள் என்றால் ஏளனமா? திமுக - விசிக கூட்டணி அவசியமா? தமிழன் பிரசன்னாவை நோக்கி இளைஞர்கள் கேள்வி! -
15 ஆண்டுகளாக 1 சீட் கூட ஜெயிக்காத தேமுதிகவுக்கு 10 தொகுதிகளா? திமுக கூட்டணிக்குள் கொதிப்பு! -
புதுச்சேரி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. ஒரு தொகுதி விசிகவுக்கு ஒதுக்கீடு! யார் யாருக்கு சீட்? -
நம்பி நம்பி.. வெம்பி வெம்பி.. அல்வா போல அள்ளிட்டுப் போன அண்ணியார்! வேதனையில் திருமா எடுத்த முடிவு! -
சங்கித் தனத்தை காட்டிய ரஜினி.. இதுக்கா முட்டுக் கொடுத்தோம்? பொளக்கும் நெட்டிசன்கள்! வெளுத்த இயக்குநர்! -
சிந்தாமல் சிதறாமல் அள்ள வேண்டும்.. ஸ்மார்ட்டாக காய் நகர்த்திய ஸ்டாலின்.. என்டிஏ கூட்டணிக்கு சேதாரம்












Click it and Unblock the Notifications