கருணாநிதியின் 97 ஆவது பிறந்தநாள் விழா.. நினைவிடத்தில் ஸ்டாலின் மலர்த்தூவி மரியாதை
சென்னை: கருணாநிதியின் 97 ஆவது பிறந்தநாளையொட்டி, அவரது நினைவிடத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்ளிட்டோர் மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.
கருணாநிதியின் 97 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்த நாளில் ஆடம்பர நிகழ்ச்சிகள் வேண்டாம் என கட்சியினருக்கு முக ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

திமுகவினர் அவரவர் இருக்கும் இடங்களிலேயே கருணாநிதியின் சிலைகளுக்கும் உருவப்படங்களுக்கும் மரியாதை செலுத்தினால் போதுமானது என அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடம் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
மெரினாவில் உள்ள நினைவிடத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்பி, துரைமுருகன் எம்எல்ஏ, டி.ஆர். பாலு எம்பி, நடிகரும் ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் சென்றனர்.
அங்கு சமாதியில் மலர்த்தூவி அஞ்சலி செலுத்தினார் ஸ்டாலின். பின்னர் தந்தையிடம் ஆசி பெற்றார். இதையடுத்து ஒருவர் பின் ஒருவராக கருணாநிதியின் சமாதியில் அஞ்சலி செலுத்தினர். அங்கு ஒரு ஜோடிக்கு ஸ்டாலின் தலைமையில் எளிய முறையில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. மணமக்களை ஸ்டாலின்,துரைமுருகன், டி ஆர் பாலு, கனிமொழி உள்ளிட்டோர் வாழ்த்தினர்.
அனைவரும் மாஸ்க் அணிந்தபடி சமூக இடைவெளியை கடைப்பிடித்தபடி கருணாநிதி சமாதிக்கு அஞ்சலி செலுத்தினர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக.. அகற்றப்பட்ட கலைஞர் படம்.. கடும் எதிர்ப்பால் மீண்டும் வைக்கப்பட்டது! -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக கருணாநிதி புகைப்படம் அகற்றமா? கொந்தளித்த வைரமுத்து.. என்ன நடந்தது? -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து












Click it and Unblock the Notifications