சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மறையாத சூரியன்.. கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி அனுசரிப்பு.. சிலை திறப்பு!

Google Oneindia Tamil News

Recommended Video

    Flashback: Karunanidhi : முதல்வர்களுக்கு உரிமையை பெற்றுக்கொடுத்த கருணாநிதி- வீடியோ

    சென்னை: கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி இன்று அனுசரிக்கப்படுகிறது.

    முன்னாள் முதல்வர் கருணாநிதி கடந்த ஆண்டு உடல்நலக் குறைவு ஏற்பட்டு காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் அவரது உடல் கடந்த ஆகஸ்ட் மாதம் 7-ஆம் தேதி மறைந்தார்.

    Karunanidhis first memorial day observed today

    இந்த நிலையில் இன்றைய தினம் அவரது முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி காலை 8 மணிக்கு திமுக சார்பில் மவுன ஊர்வலம் நடத்தப்படுகிறது. அண்ணா சாலையிலிருந்து புறப்படும் அமைதி ஊர்வலம் மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடம் நோக்கி செல்கிறது.

    இந்த ஊர்வலரத்துக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமை வகிக்கிறார். இந்த அமைதி ஊர்வலத்தில் மாநிலம் முழுவதும் இருந்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொள்கின்றனர். கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி மவுன அஞ்சலி செலுத்தப்படுகிறது.

    இன்றைய தினம் மாலை 5 மணிக்கு முரசொலி அலுவலகத்தில் கருணாநிதி சிலை திறப்பு விழா நடைபெறுகிறது. விழாவுக்கு திக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்குகிறார். சிலையை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திறந்து வைக்கிறார்.

    இதில் காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி, கவிஞர் வைரமுத்து ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். இதையடுத்து ஒய்எம்சிஏ மைதானத்தில் பொதுக் கூட்டமும் நடைபெறுகிறது.

    English summary
    Karunanidhi's first memorial day observed today. His statue opening ceremony also held today in Murasoli office.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X