கருணாநிதி சிலை திறப்பு: கை குலுக்கி வரவேற்ற ஸ்டாலின்.. முதல் வரிசை மரியாதை.. நெகிழ்ந்த ரஜினிகாந்த்
Recommended Video

சென்னை: கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்காக, அண்ணா அறிவாலயம் வருகை தந்த நடிகர் ரஜினிகாந்தை, கைகுலுக்கி வரவேற்றார் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்.
திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழா அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெறுகிறது. இதையொட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் அதில் பங்கேற்க வருகை தந்தனர்.
நடிகர் ரஜினிகாந்த் மாலை 4.30 மணி அளவில் அண்ணா அறிவாலயம் வந்தார். அவருக்கு முன் வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது.

கைகுலுக்கி வரவேற்பு
ரஜினிகாந்த் தனது இருக்கை வரிசைக்கு வந்ததும், அங்கே ஏற்கனவே அமர்ந்திருந்த நடிகர் சத்ருகன் சின்கா, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோரிடம் நின்றபடியே பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு மு.க.ஸ்டாலின் விரைந்து வந்தார். அவர் ரஜினிகாந்தின் கைகளை பிடித்து குலுக்கியபடி முகம் மலர்ந்தது வரவேற்றார்.

சந்ருகன் சின்கா
இருவரும் சுமார் மூன்று முறை கைகுலுக்கிக் கொண்டனர். இதன்பிறகு வைகோவின் கைகளை குலுக்கி ஸ்டாலின் வரவேற்றார். இதைத்தொடர்ந்து சத்ருகன்சின்கா அருகே உள்ள இருக்கையில் ரஜினிகாந்த் அமர வைக்கப்பட்டார். இருவரும் மிகவும் தீவிரமாக பல விஷயங்களை பேசிக் கொண்டு இருந்ததை கவனிக்க முடிந்தது.

முரசொலி விமர்சனம்
சமீபத்தில் திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில், ரஜினிகாந்த்தை விமர்சனம் செய்து கட்டுரை இடம் பெற்றிருந்தது. இதனால் திமுக மற்றும் ரஜினிகாந்த் நடுவே உறவு சரியில்லையோ என்ற தோற்றம் ஏற்பட்டது. ஆனால் பிறகு முரசொலி நாளிதழ், தனது கட்டுரைக்காக, வருத்தம் தெரிவித்தது. சமீபத்தில், ரஜினிகாந்த் பிறந்த நாளின் போது ஸ்டாலின் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்தார். ரஜினிகாந்த் பதிலுக்கு நன்றி தெரிவித்திருந்தார்.

முதல் வரிசை
இந்த நிலையில் கருணாநிதி சிலை திறப்பு விழாவில், ரஜினிகாந்த்திற்கு, முதல் வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டதோடு, அவரிடம் சில வினாடிகள் கைகுலுக்கியபடி ஸ்டாலின் வரவேற்றதும் திமுக தொண்டர்கள் மற்றும் ரஜினிகாந்த் ரசிகர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications