சிவாஜி கணேசனை டிவியில் கண்டால் முத்தம் கொடுப்பார் கருணாநிதி! கனிமொழி பகிர்ந்த ருசிகரத் தகவல்!
சென்னை: நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் முதல் ரசிகர் கருணாநிதி என கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். கருணாநிதி பிறந்தநாள் நூற்றாண்டு விழாவையொட்டி சென்னை உட்லாண்ட்ஸ் தியேட்டரில் நடைபெற்ற பராசக்தி திரைப்படம் திரையிடல் நிகழ்ச்சியில் இதனைக் கூறினார்.
மேலும், அந்த நிகழ்ச்சியில் கருணாநிதி குறித்த ருசிகரத் தகவல் ஒன்றையும் கனிமொழி பகிர்ந்தார். அதாவது,சிவாஜி கணேசனை டிவியில் கண்டால் முத்தம் கொடுப்பார் கருணாநிதி என்றும் அந்தளவுக்கு அவரது ரசிகன் என்றும் குறிப்பிட்டார். இது தொடர்பாக கனிமொழி மேலும் பேசியதாவது;

''தமிழ் திரையுலகம் கடந்து சென்றுவிட முடியாத ஒரு மைல்ஸ்டோன் திரைப்படம் பராசக்தி. சமூகத்தை விமர்சனத்தால் சாடிய பராசக்தி திரைப்படத்தை வெளியிடுவதில் பல்வேறு சிக்கல்கள் இருந்தது. ஆனால் திரைப்படத்தைப் பார்த்த பின் எல்லாரும் கை தட்டி வரவேற்றார்கள். பிடிக்காதவர்கள் கூட படத்தை கைதட்டி ரசித்து, விமர்சித்த அளவுக்கு வரவேற்பை பெற்றது.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் முதல் ரசிகர் கருணாநிதி என்று சொல்லலாம். எப்படி நடிக்கிறான் பாரு எனப் படம் ஓடிக்கொண்டிருக்கும்போது எழுந்து சென்று தொலைக்காட்சியில் முத்தம் கொடுப்பார் கலைஞர். அம்மா கூட கிண்டலடிப்பார்கள். ஆனாலும், அவரால் கட்டுப்படுத்த முடியாது.
நாயகனுக்குப் பகுத்தறிவு சொல்லிக் கொடுத்து, நாயகனுக்கு வழிகாட்டிய படமாகப் பராசக்தி திரைப்படம் அமைந்தது. இப்போது வரை தமிழ் சினிமா ஹீரோயின்கள் பைத்தியக்காரத்தனமாக கேள்விகள் கேட்பது போல தான் கதாபாத்திரங்கள் உள்ளன. ஆனால், அன்றே கதாநாயகியைச் சிந்திக்கத் தெரிந்த, சமூகக் கருத்துகள் பேசும் கதாநாயகியாக உருவாக்கியிருந்தார் கலைஞர்.
உத்திரபிரதேச வழக்கில் பஞ்சாயத்து செய்ய நீதிமன்றத்திற்கு உரிமை கிடையாது. முதலில் பாலியல் வன்முறை குற்றவாளிக்கு நீதிமன்றம் தண்டனை கொடுக்க வேண்டும். குற்றத்திற்கு தண்டனை தராமல் இருப்பதற்கு நீதிமன்றத்திற்கு யார் உரிமை கொடுத்தது. கலாசாரத்தை பாதுகாக்கிறோம் என்று சொல்லி ஒன்றிய அரசு பெண்களை அவமானப்படுத்துகிறார்கள்.

ரீ ரிலீஸ் செய்யப்பட்ட 'பராசக்தி' திரைப்படத்தை, திரைப்பட நடிகரும்,பராசக்தி திரைப்பட கதாநாயகன் மறைந்த சிவாஜி கணேசன் அவரின் மகனுமான பிரபு, தி.மு.கழக விளையாட்டு மேம்பாட்டு அணிச் செயலாளர் தயாநிதி மாறன் எம்.பி ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.''
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications