சின்னம்மாவுக்கு துரோகம் செய்தால் பாவம் சும்மாவிடுமா?.. அதான் துரத்திக்கிட்டே இருக்கு.. கருணாஸ்
சென்னை: துரோகம் செய்தோர் தோல்வியைத்தான் சந்திப்பார்கள், அதிமுகவிற்கு தோல்வியை பரிசாக தந்த மக்களுக்கு நன்றி என முக்குலத்தோர் புலிகள் படையின் தலைவரும் முன்னாள் எம்எல்ஏவுமான கருணாஸ் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், அதாவது மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான தேர்தல் கடந்த 19ஆம் தேதி நடந்து முடிந்தது.
இந்த தேர்தலில் தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அவற்றில் உள்ள 12,838 வார்டுகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது. இதன் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது.

படுதோல்விக்கு காரணம்
இந்த தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்தது. தோல்விக்கான காரணத்தை ஆராய்வோம் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் முக்குலத்தோர் புலிகள் படைகளின் தலைவர் கருணாஸும் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

கொங்கு மண்டலம் சங்கு ஊதிவிட்டது
அந்த அறிக்கையில் அவர் கூறுகையில், நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களில் தி.மு.க. வென்றுள்ளது. அதிமுக சில இடங்களை தவிர மற்ற இடங்களில் பெரும் தோல்வியை சந்தித்துள்ளது. குறிப்பாக அ.தி.மு.க வின் கோட்டை என்று பிதற்றிக் கொண்டிருந்த எடப்பாடிக்கு கொங்கு மண்டலமே சங்கு ஊதிவிட்டது. அதிமுகவிற்கு தோல்வியை கொடுத்த தமிழக மக்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

தோல்விக்கு காரணம் துரோகம்தான்
அதிமுக தோல்வியடைந்ததற்கு என்ன காரணம்? துரோகம்தான். பக்கத்திலேயே இருந்தோர்க்கு செய்தத் துரோகமும், தமிழ்நாட்டு மக்களுக்கு செய்த துரோகமும்தான் காரணம். அதிமுக தோல்வி மக்கள் தந்த பரிசு மட்டுமல்ல, சிறந்த பதிலும்கூட. நான் கடந்த சில வாரங்களுக்கு முன்பே அதிமுகவின் துரோகங்களைப் பட்டியலிட்டு அறிக்கை விட்டிருந்தேன். ஆனால் மக்கள் நான் எதிர்ப்பார்த்ததைவிட கூடுதலான தோல்வியை அதிமுகவிற்கு அள்ளிக் கொடுத்திருக்கிறார்கள்.

விளைவுகள்
இது தொடக்கம்தான் இன்னும் பல்வேறு விளைவுகளையும் தோல்விகளையும் அதிமுக எதிர்காலத்தில் சந்திக்கும். மறைந்த முன்னாள் முதல்வர் அம்மா அவர்கள் கட்டிக்காத்த இயக்கத்தை எடப்பாடி, ஓ.பி.எஸ். கூட்டணியே உடைத்து சுக்குநூறாக்கும், அவர்கள் அம்மாவிற்கு செய்யும் பாவமும், சின்னம்மாவிற்கு செய்த துரோகமும் இனி அவர்களை துரத்திக்கொண்டே இருக்கும்.

சின்னம்மாவுக்கு துரோகம்
துரோகம் செய்தோர் தோல்வியைத்தான் சந்திப்பார்கள் அ.இ.அ.தி.மு.க.விற்கு நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் தோல்வியை பரிசாகவும், பதிலாகவும் தந்த தமிழ்நாட்டு மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என அந்த அறிக்கையில் கருணாஸ் தெரிவித்துள்ளார்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications