Karunas: உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறேன்.. எந்த தொகுதி? கருணாஸ் சொன்ன பதில்
சென்னை: திமுக உடனான கூட்டணியை முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவர் கருணாஸ் உறுதி செய்துள்ளார். இந்த சட்டசபைத் தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் முக்குலத்தோர் புலிப்படை போட்டியிட உள்ளதாக கூறிய கருணாஸ், அண்ணா அறிவாலயத்திற்கு மகிழ்ச்சியுடன் வந்து மகிழ்ச்சியுடன் செல்வதாக தெரிவித்துள்ளார்.
2026ஆம் ஆண்டுக்கான சட்டசபைத் தேர்தலில் திமுக உடனான கூட்டணியில் முக்குலத்தோர் புலிப்படை கட்சி இணைந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே உதயநிதி ஸ்டாலின் உடன் நடிகர் கருணாஸ் நெருக்கம் காட்டி வந்தார். அதேபோல் திமுகவின் மேடைகளிலும் கருணாஸ் தொடர்ச்சியாக தோன்றி வந்தார். ஒரு பக்கம் தவெக தலைவர் விஜய்யையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.

2016ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலின் போது அதிமுக உடன் முக்குலத்தோர் புலிப்படை கட்சி கூட்டணி அமைத்தது. அப்போது இரட்டை இலை சின்னத்தில் திருவாடனை தொகுதியில் போட்டியிட்ட நடிகர் கருணாஸ், சுமார் 8 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதன்பின் ஜெயலலிதா மறைவு காரணமாக கருணாஸ் திமுக பக்கம் மாறினார்.
இருப்பினும் 2021 சட்டசபைத் தேர்தலின் போது திமுக கூட்டணியில் இணைய முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் முயற்சித்தார். ஆனால் திமுக தலைமை கருணாஸ் தரப்பை பெரிதாக கண்டு கொள்ளவில்லை. இதன்பின் உதயநிதி ஸ்டாலின் மூலமாக கடந்த சில ஆண்டுகளாகவே திமுக நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வந்தார்.
சிவகாசி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கபடி போட்டியை நடத்தினார். இதனையடுத்து இம்முறை திமுக கூட்டணியில் கருணாஸ் இணைந்திருக்கிறார். இன்று திமுக தரப்பில் அமைக்கப்பட்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குழுவுடன் கருணாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர்.
இந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களை சந்தித்து கருணாஸ் பேசுகையில், திமுக உடனான பேச்சுவார்த்தை சுமூகமாக, மகிழ்ச்சியாக அமைந்தது. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் முக்குலத்தோர் புலிப்படை இணைத்து கொண்டதற்கு முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். எங்களுக்கு சாதகமாக விருப்ப பட்டியலை கொடுத்துள்ளோம்.
திமுக பொருளாளர் டிஆர் பாலுவிடம் கடிதம் அளித்துள்ளோம். அவர்கள் பரிசீலனை செய்துவிட்டு எங்களுக்கு கூறுவார்கள். அதன்பின் எந்த தொகுதி என்பதை அறிவிப்போம். நிச்சயமாக திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிடுவோம்.. வேட்பாளராக நான்தான் போட்டியிடுவேன் என்று அறிவித்துள்ளார்.
-
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்! திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்! -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
வைத்திலிங்கம் நிம்மதி.. ரூ.28 கோடி முறைகேடு வழக்கு ஓவர் ஓவர்.. கோர்ட்டில் சொன்ன லஞ்ச ஒழிப்புத்துறை! -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
2 அமைச்சர் பதவிக்காக.. திமுகவை கழற்றிவிட்டது நியாயமா? ராகுலுக்கு சிபிஎம் அடுக்கடுக்காக கேள்வி! -
“ஆதவ் அர்ஜுனாவுக்கு தொடர்பா? தைரியம் இருந்தா சட்டரீதியாக திமுக நிரூபிக்கட்டும்”.. தவெக பதிலடி! -
ரூ.258 கோடி போதைப்பொருள் வழக்கு பரபரப்பு: விஜய் அரசுக்கு எதிராக திமுக அதிரடி குற்றச்சாட்டு -
குறுநில மன்னர்களுக்கு செக்.. மா.செ.கள் ஏரியாக்களை பறிக்கும் ஸ்டாலின்! இளந்தாரிகளுக்கு மெகா வாய்ப்பு! -
3 மாதத்தில் ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் எப்போ சொன்னார்? திரித்து பரப்புவதா? தங்கம் தென்னரசு டென்ஷன்












Click it and Unblock the Notifications