Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கிடா மீசை நடிகர் தவசியின் உயிரைக்குடித்த உணவுக்குழல் புற்றுநோய்

கிடா மீசைக்காரர் கருப்பன் குசும்புக்காரன் வசனத்தினால் பிரபலமடைந்த நடிகர் தவசி இன்று உடல்நலக்குறைவினால் காலமானார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: கிழக்கு சீமையிலே படத்தில் அறிமுகமாகி ஏராளமான படங்களில் நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்திருக்கும் நடிகர் தவசி உடல் நலக்குறைவினார் இன்று காலமானார். கம்பீரமான குரலுக்கு சொந்தக்காரரான தவசியின் உயிரை உணவுக்குழல் புற்றுநோய் குடித்து விட்டது

தேனி மாவட்டம் கோணாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் நடிகர் தவசி. பாரதிராஜாவின் கிழக்கு சீமையிலே படத்தில் அறிமுகமானவர். எத்தனையோ படங்களில் கிராமத்து கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் அவரை அதிக ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்த்தது வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம்தான்.

Karupan kusumbukaran fame actor Thavasi dies in cancer

கருப்பன் குசும்புக்காரன் என்ற ஒற்றை வசனத்தின் மூலம் அந் படத்தில் பிரபலமடைந்தார். சூரிக்கு அப்பாவாக இவர் நடித்த கதாபாத்திரம் பலராலும் ரசிக்கப்பட்டது. சன் டிவியில் ஒளிபரப்பான ராசாத்தி டிவி சீரியலில் பூசாரியாக நடித்து வந்தார் தவசி. படப்பில் கலந்து கொள்ள சென்ற போது விபத்தில் சிக்கி முடங்கிப் போனார்.

கொரோனா லாக்டவுனில் படப்பிடிப்புகள் நிறுத்தப்படவே புற்றுநோய் தீவிரம் அதிகமானது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மிகவும் மெலிந்து, எலும்பும் தோலுமாகக் காட்சியளிக்கும் வீடியோ கடந்த வாரம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அந்த வீடியோவில் தவசி குறித்து பேசியவர், புற்றுநோய் பாதிப்பால் அவதிப்படுவதாகவும், மருத்துவச் சிகிச்சைக்குப் பணஉதவி வேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்திருந்தார்.

'கருப்பன் குசும்புக்காரன்' நடிகர் தவசி காலாமனார்.. ரசிகர்கள்.. திரைத்துறையினர் அதிர்ச்சி!

அவரது வேண்டுகோளை ஏற்று திரைத்துறையினர் பலரும் அவருக்கு உதவிகளைச் செய்து வைந்தனர். எம்எல்ஏ சரவணன் நடத்தி வரும் மருத்துவமனையில் ஐ.சி.யூவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக, நடிகர் தவசி காலமானார்.

கம்பீரமான குரலுக்கு சொந்தக்காரரான தவசியின் உயிரை உணவுக்குழல் புற்றுநோய் குடித்து விட்டது என்பதுதான் சோகம். தவசியின் மரணம் திரை உலகினரையும் ரசிகர்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+