கருப்பர் கூட்டம் சுரேந்திரன், நபிகள் நாயகத்தை அவமரியாதை செய்த கோபல் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
கந்தர் சஷ்டி கவசம் பற்றி அவதூறாக பேசிய சுரேந்திரன் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. நபிகள் நாயகம் குறித்து ஆபாசமாக பேசிய கோபால் என்பவர் மீதும் குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்
சென்னை: கந்த சஷ்டி கவசம் பாடல் பற்றி அவதூறாக கருத்து வெளியிட்ட கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் உத்தரவின் பேரில் குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளதாகவும் நபிகள் நாயகம் குறித்து ஆபாசமாக பேசிய கோபால் என்பவர் மீதும் குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறு வீடியோக்கள் வெளியிடப்பட்டிருந்தன. கடவுள்கள் பற்றியும் மோசமான விமர்சனங்கள் அந்த சேனலில் வெளியிடப்பட்டிருந்தன.

அந்த யூடியூப் சேனலை தடை செய்யவேண்டும் என்றும், சம்மந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என பாஜக சார்பில் சென்னை போலீஸ் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கறுப்பர் கூட்டம் யூட்யூப் சேனலை சேர்ந்த செந்தில்வாசன் என்பவரை கைது செய்தனர். கறுப்பர் கூட்டம் யூட்யூப் சேனலில் வெளியிடப்பட்டிருந்த அனைத்து வீடியோக்களும் நீக்கப்பட்டன.
காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் கடந்த 16 ஆம் தேதி புதுச்சேரி அரியங்குப்பம் காவல்நிலையத்தில் சரண் அடைந்தார். அதன் பின்னர் அவர் சென்னை போலீசிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், சுரேந்திரன் மற்றும் செந்தில்வாசனை ஜூலை 30ம் தேதி வரை நீதிமன்றக்காவலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில் சுரேந்திரன் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது. சென்னை மாநகர காவல் ஆய்வாளர் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில் சுரேந்திரன் குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதே போல இந்து தமிழர் பேரவை என்ற அமைப்பை சேர்ந்த கோபால் என்பவர் நபிகள் நாயகம் குறித்து அவதூறு கருத்துகளை பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இஸ்லாமிய இயக்கத்தினர், மத்திய குற்றப்பிரிவு போலீஸ் மற்றும் காவல் நிலையங்களில் புகார் அளித்தனர். விசாரணை நடத்திய போலீசார் கோபால் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்தனர். கோபால் மீதும் தற்போது குண்டர் தடுப்புச்சட்டம் பாய்ந்துள்ளது.
-
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை












Click it and Unblock the Notifications