“பெண்ணுடன் இருப்பதாக கூறுவது AI படம்.. விசாரிக்காம கட்சியை விட்டு நீக்குவதா?” - கருப்பு முருகானந்தம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொய்யான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் விசாரணையே இன்றி தன்னை பாஜகவை விட்டு நீக்கியுள்ளதாக கருப்பு முருகானந்தம் போர்க்கொடி தூக்கியுள்ளார். ஏஐ தொழில்நுட்பம் மூலம் சித்தரிக்கப்பட்ட போலிப் புகைப்படங்களின் அடிப்படையில் தன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கருப்பு முருகானந்தம் குற்றம்சாட்டியுள்ளார்.

பெண் பாலியல் புகார் அளித்ததைத் தொடர்ந்து, தமிழக பாஜக மாநிலப் பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தத்தை கட்சியில் இருந்து நீக்கி, அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, முற்றிலும் பொய்யான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் எவ்வித விசாரணையுமின்றி தன்னை நீக்கியதும் மிகுந்த கண்டனத்திற்குரியது என கருப்பு முருகானந்தம் தெரிவித்துள்ளார்.

Karuppu Muruganandam

தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று, "தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் M.முருகானந்தம் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்ததால் கட்சியின் பொறுப்பில் இருந்து உடனடியாக விடுவிக்கப்படுகிறார்" என அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து தனது எக்ஸ் பக்கத்தில் கருப்பு முருகானந்தம் வெளியிட்டுள்ள பதிவில், "ஆர்.எஸ்.எஸ் (RSS) அமைப்பில் தொடங்கிய எனது இந்த நெடிய பயணம், பாரதிய ஜனதா கட்சியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக எவ்விதப் புகாருமின்றித் தூய்மையான முறையில் அர்ப்பணிப்புடன் தொடர்ந்த ஒன்றாகும்.

இத்தகைய சூழலில், முற்றிலும் பொய்யான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் மூலமாக எவ்வித முறையான விசாரணையும் நடத்தப்படாமல், என்னை உடனடியாகப் பொறுப்பிலிருந்து விடுவித்தது மிகுந்த கண்டனத்திற்குரியது.

இது தொடர்பாக தேசியப் பொதுச் செயலாளர் சந்தோஷிடமும், மாநிலப் பொறுப்பாளர் அரவிந்த் மேனனிடமும் நான் ஏற்கெனவே பேசியுள்ளேன், ஒழுங்கு நடவடிக்கைக் குழு முழுமையாக விசாரித்த பிறகே உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், அவ்வாறான எவ்வித விசாரணையுமின்றி, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் மூலம் போலியாக உருவாக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் புனையப்பட்ட போலிப் புகார் மனுவை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு என் மீது நடவடிக்கை எடுத்திருப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும், இத்தகைய போலிச் செய்திகளையும் வதந்திகளையும் பரப்புவோர் மீது மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+