அடேங்கப்பா.. அமைச்சருக்கு எதிராக.. கரூரில் இத்தனை வேட்பாளர்களா... வால்பாறையில் தான் ரொம்ப கம்மி

Subscribe to Oneindia Tamil

சென்னை: வரும் சட்டசபை தேர்தலில் கரூரில் அதிகபட்சமாக 77 வேட்பாளர்களும் வால்பாறையில் குறைந்தபட்சமாக ஆறு வேட்பாளர்களும் போட்டியிடுகிறார்கள்.

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாகச் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து கடந்த மார்ச் 12ஆம் தேதி முதல் மார்ச் 19ஆம் தேதி வரை வேட்பு மனுக்கள் பெறப்பட்டன.

வேட்பு மனுக்கள் அனைத்தும் மார்ச் 20ஆம் தேதி பரிசீரிலை செய்யப்பட்டன. அதைத்தொடர்ந்து நேற்று வரை வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற அவசாகம் அளிக்கப்பட்டது.

5 முனை போட்டி

5 முனை போட்டி

இந்த முறை தமிழ்நாட்டில் ஐந்து முனை போட்டி ஏற்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக அணி, ஸ்டாலின் தலைமையில் திமுக அணி, கமல் தலைமையில் மக்கள் நீதி மய்யம், டிடிவி தினகரன் தலைமையில் அமமுக களத்தில் உள்ளன. அதேபோல நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்தே களமிறங்குகிறது. பொதுவாக இந்திய தேர்தல்களில் கட்சிகளைத் தாண்டி சுயேச்சையாகப் பல வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள்.

77 வேட்பாளர்கள்

77 வேட்பாளர்கள்

நேற்று வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறும் தேதி நிறைவடைந்துள்ள நிலையில், அதிகபட்சமாகக் கரூர் தொகுதியில் 77 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். கரூரில் மொத்தம் 97 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். அவர்களில் 13 பேரின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. மேலும், ஏழு பேர் தங்கள் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றுவிட்டனர்,

முன்னாள் அமைச்சர் vs இந்நாள் அமைச்சர்

முன்னாள் அமைச்சர் vs இந்நாள் அமைச்சர்

கரூரில் அதிமுக சார்பில் அமைச்சர் விஜயபாஸ்கர், திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோருக்கு இடையே நேரடி போட்டி நிலவுகிறது. அதேபோல அமமுக கூட்டணி சார்பில் தேமுதிகவின் கஸ்தூரி என் தங்கராஜ் என்பவரும் மக்கள் நீதி மய்யம் சார்பில் மோகன் ராஜும் நாம் தமிழர் சார்பில் கருப்பையா என்பவரும் போட்டியிடுகிறார்கள்.

குறைந்த வேட்பாளர்கள்

குறைந்த வேட்பாளர்கள்

அதேபோல குறைந்தபட்சமாகக் கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள வால்பாறை தொகுதியில் ஆறு பேர் போட்டியிடுகிறார்கள். இங்கு மொத்தம் 15 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். அவர்களில் ஒன்பது பேரின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. யாரும் தங்கள் வேட்பு மனுக்களை வாபஸ் பெறவில்லை. இங்கு ஐந்து பிரதான கட்சிகளும் ஒரு சுயேச்சையும் களமிறங்குகின்றனர்.

Array

Array

முதல்வர் பழனிசாமி போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் 28 பேர் களமிறங்குகின்றனர். அதேநேரம் சென்னை கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 35 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+