செந்தில் பாலாஜி செயலால் திமுக சீனியர்கள் அப்செட்.. கோடு போட சொன்னா இப்படி பண்ணிட்டாரே

Subscribe to Oneindia Tamil

சென்னை: கரூரில் நேற்று திமுக முப்பெரும் விழா தொடங்கியவுடன் மழையும் பெய்ய தொடங்கி விட்டது. மழை பெய்து கொண்டே இருந்ததால் ஒருபக்கம் கூட்டம் கலையவும் தொடங்கியது. டிரோன் ஷாட்டுக்காக பந்தல் போடாமல் நிகழ்ச்சியை செந்தில் பாலாஜி ஏற்பாடு செய்த நிலையில், இவ்வளவு செலவு செய்தும் தொண்டர்கள் மழையில் நனைந்ததும், ஸ்டாலின் சீக்கிரம் உரையை முடித்ததும் குறைபாடாக பார்க்கப்படுகிறது. இதனால் கே.என். நேரு உள்ளிட்ட சீனியர்கள் அப்செட் ஆனதாக சொல்லப்படுகிறது.

திமுக சார்பில் அண்ணா பிறந்த நாள், பெரியார் பிறந்த நாள் மற்றும் திமுக தொடங்கப்பட்ட நாள் ஆகிய முப்பெரும் விழா கரூர் கோடங்கிபட்டி பைபாஸ் சாலை பகுதியில் நேற்று நடைபெற்றது. விழாவில் பங்கேற்பதற்காக திமுக தலைவரும், முதல்வருமான முக ஸ்டாலின் திறந்த வேனில் வந்தார்.

karur-dmk-mega-event-ends-early-due-to-rain-seniors-upset-over-senthil-balaji-fumble

செந்தில் பாலாஜியை பாராட்டிய ஸ்டாலின்

வழிநெடுகிலும் அவருக்கு பொதுமக்கள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். விழா நடைபெறும் மேடையில் இருந்து சுமார் பல மீட்டர் தூரத்திற்கு முன்பு வரை ஸ்டாலின் திறந்த வேன் செல்லும் வகையில் சாலை அமைக்கப்பட்டிருந்தது. இந்த சாலையில் ஸ்டாலின் வேன் மெதுவாக சென்றது.

அப்போது மேடையின் முன்பகுதியில் திரண்டிருந்த திரளான தொண்டர்களை பார்த்து முக ஸ்டாலின் உற்சாகமாக கையசைத்தார். பல ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கரூரில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் பங்கேற்றனர். "கோடு போட சொன்னால் ரோடு போட்டுள்ளார்" என்று செந்தில் பாலாஜியை மு.க ஸ்டாலினும் பாராட்டினார். அலைகடல் போல திரண்டு இருந்த கூட்டத்தை பார்த்து ஸ்டாலினும் நெகிழ்ச்சி அடைந்தார்.

ஸ்டாலின் பேசும்போதே கலைந்து சென்ற தொண்டர்கள்

ஆனால் கூட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் மழை பெய்யத் தொடங்கியது. இதனால், தொண்டர்கள் மழையில் நனையாமல் இருக்க அங்கே இருந்த சேர்களையும் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு நின்றனர். மற்றொரு பக்கம் ஸ்டாலின் பேசிக்கொண்டிருந்த போதே, கூட்டமும் கலையத் தொடங்கியது. ஒதுங்கி நிற்பதற்கு இடம் இல்லாமல் எல்லாமே திறந்த வெளி இடம் என்பதால், திமுக தொண்டர்கள் கூட்டத்திலிருந்து கலையத் தொடங்கினர்.

தொண்டர்கள் நனைந்தபடி நின்றதால், முதல்வர் ஸ்டாலினும் தனது பேச்சை சீக்கிரமாகவே முடித்துக் கொண்டார். இவ்வளவு செலவு செய்து பிரம்மாண்ட முப்பெரும் விழாவுக்கு ஏற்பாடு செய்தும், மழை காரணமாக நிகழ்ச்சியில் தொண்டர்கள் நனைந்து சிரமத்தை சந்தித்ததாலும், கூட்டம் கலைந்து போனதாலும், கேஎன் நேரு போன்ற சீனியர் அமைச்சர்கள் அப்செட் ஆனார்கள்.

பெரிய குறையாக மாறிவிட்டது

மாநாடு போல திட்டமிட்டு முப்பெரும் நிகழ்ச்சி நடைபெற்ற போதிலும், தொண்டர்கள் நனையாமல் இருக்க ஏற்பாடு செய்யப்படவில்லை என்று திமுகவினர் முனுமுனுத்ததையும் காண முடிந்தது. திமுக பொதுக்கூட்டம், மாநாடு என்றால் நிகழ்ச்சி ஏற்பாடு பக்காவாக இருக்கும் என்பதை எதிர்க்கட்சியில் சேர்ந்தவர்கள் கூட சொல்லுவதை பார்க்க முடியும். நேற்றைய முப்பெரும் விழாவிலும் இருக்கைகளில் தண்ணீர் பாட்டில், ஸ்நாக்ஸ் என தொண்டர்களுக்கான ஏற்பாடுகள் சிறப்பாக இருந்தாலும், பந்தல் எதுவும் போடாதது பெரிய குறையாக மாறிவிட்டது.

ட்ரோன் ஷாட் மூலம் கூட்டத்தை காட்ட நினைத்து

வழக்கமாக திமுக பொதுக்கூட்டங்களில் பந்தல் போடப்பட்டு, வெயிலும் மழையாலும் தொண்டர்கள் பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படும். ஆனால், இந்த முறை செந்தில் பாலாஜி ட்ரோன் ஷாட் மூலம் கூட்டத்தை காட்ட வேண்டும் என்பதில் முனைப்புடன் இருந்ததால் பந்தல் போடப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.

பந்தல் போடப்பட்டிருந்தால், நேற்று மழை பெய்த போது தொண்டர்கள் எந்த சிரமும் இன்றி முதல்வர் ஸ்டாலினின் உரையை கேட்டிருப்பார்கள். ஆனால் பந்தல் போட்டால் ட்ரோன் ஷாட்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதால் செந்தில் பாலாஜி இப்படியான முடிவை எடுத்ததாக சொல்லப்படுகிறது. இருப்பினும் மழையால் நிலைமை மொத்தமாக மாறிவிட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+