நான் எதுவேணாலும் பண்ணுவேன்.. போய் இன்ஸ்பெக்டரை வர சொல்லு.. அதிகாரி மிரட்டல்.. வைரல் வீடியோ
கரூர் நெடுஞ்சாலை துறை அதிகாரி மது அருந்தும் வீடியோ வைரலாகி வருகிறது.
Recommended Video

சென்னை: "நான் எதுவேணாலும் பண்ணுவேன்.. உனக்கென்ன... போய் உன் இன்ஸ்பெக்டரை வரச்சொல்லு.." என்ற மிரட்டல் தொனியில் அதிகாரி ஒருவர் பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.
கரூர் மாவட்டம் தாந்தோன்றிமலை சிவசக்தி நகர் கிழக்கு பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர். இவர் நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஆவார்.
தாந்தோன்றி மலை பாசன வாய்க்காமலை ஆக்கிரமித்து இரவு நேரங்களில் நண்பர்களை அழைத்து வந்து தண்ணி அடிப்பதாக புகார் வந்திருக்கிறது.
Also Read | சிகிச்சைக்கு வந்த பெண் நோயாளியிடம் அத்துமீறல்.. புதுவை ஜிப்மரில் பரபரப்பு.. டாக்டர் மீது வழக்கு

இரவு நேரம்
அதன்படியே ராஜசேகர் மேற்குறிப்பிட்ட இடத்தில் மது அருந்தும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அந்த வீடியோ இரவு நேரத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

நாய் குரைக்கிறது
ஒதுக்குப்புறமாக தெரியும் அந்த இடத்தில் ஷெட் போல போடப்பட்டு ஒரு விளக்கும் எரிகிறது. ஒரு நாய் அருகில் நின்று கொண்டு குரைத்து கொண்டே இருக்கிறது.

இன்ஸ்பெக்டர்
அங்கிருக்கும் டேபிள் மீது மது பாட்டில்களை வைத்து கொண்டு ராஜசேகர் தண்ணி அடிக்கிறார். அவருடன் நண்பர் ஒருவரும் சேர்ந்து மது அருந்தி கொண்டிருக்கிறார். அப்போது வீடியோ எடுக்கும் நபர் அவர்களிடம் சென்று, "என்ன பண்ணிட்டு இருக்கீங்க சார்.. தண்ணி அடிச்சிட்டு இருக்கீங்களா? இன்ஸ்பெக்டரை வர சொல்லட்டுமா?" என்று கேட்கிறார்.

அலட்சிய பதில்
அதற்கு ராஜசேகர், "நான் எதுவேணும்னாலும் பண்ணுவேன்.. உனக்கென்ன..." என்று கேட்கிறார். அதற்கு அந்நபர், "ஏங்க.. இது பொது இடங்க.. தண்ணி அடிச்சிங்கன்னா என்ன அர்த்தம்? இருங்க இன்ஸ்பெக்டர் கிட்டயே சொல்றேன்" என்கிறார். உடனே ராஜசேகர், "போய் இன்ஸ்பெக்டரை வரச்சொல்லு.."என்று அலட்சியமாக பதில் சொல்லுகிறார்.












Click it and Unblock the Notifications