தாமரையும் பூத்திருக்கு.. தவெக பழுத்திருக்கு! பாஜக கூட்டணிக்கு விஜய் ஓகே? 2026 தேர்தலில் ட்விஸ்ட்?
சென்னை: கரூர் சம்பவத்தையடுத்து தவெக தலைவர் விஜய், பாஜகவுடன் கூட்டணி அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகியுள்ளதாக கூறுகினர் அரசியல் பார்வையாளர்கள். கரூர் துயர சம்பவத்தையடுத்து ஆளும் திமுக அரசு மீது பாஜக பழி சுமத்தியதோடு, அதிகாரிகளின் அலட்சியமே 41 பேரின் மரணத்துக்கு காரணம் என குற்றம்சாட்டியுள்ளது. இந்நிலையில், தவெகவை கூட்டணிக்கு இழுக்கும் முயற்சி தான் இது என விமர்சிக்கப்பட்ட நிலையில், அதற்கான சாத்தியக்கூறுகள் டெல்லியில் தென்பட ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் 2025ம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் சம்பவம், தமிழ்நாட்டின் அரசியல் சூழலைப் பெரிதும் அதிர வைத்துவிட்டது என்றே சொல்லலாம்.
இந்த சோக சம்பவத்தில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பலரின் 41 பேரின் உயிர்கள் பறிக்கப்பட்டது. இந்த கொடுமையான நிகழ்வு நாடு முழுவதும் கடுமையான அதிர்ச்சியையும் உருவாக்கியுள்ள நிலையில், இந்த சம்பவத்துக்குப் பிறகு, தமிழக அரசு ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அமைத்து விசாரணையை தொடங்கியது.

கரூர் கூட்ட நெரிசல்
உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் அமைந்த இந்த ஆணையம், சம்பவ இடத்தையும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் பாதிக்கப்பட்டவர்களை நேரடியாக சந்தித்து விசாரணைகளை மேற்கொண்டது. இந்த சம்பவத்தின் பின்னணியில், தவெக தலைவர் விஜய், திட்டமிடப்பட்ட நேரத்திலிருந்து அதிக தாமதம் காரணமாக, மக்கள் வெயிலில் நீண்ட நேரம் நிற்க நிர்பந்திக்கபட்டனர். இதனால் கூட்டம் பெரிதும் சோர்வு அடைந்து, மக்கள் முன்னேற முயன்றபோது சிலர் கீழே விழுந்தனர். இதனால் உயிரிழப்பு அதிகரித்தது.
விஜய் தவெக
இந்நிலையில், கரூர் சம்பவத்துக்குப் பிறகு, பாஜக, தமிழ்நாட்டில் அரசியல் மறுசீரமைப்பை நோக்கி தனது வாய்ப்புகளை ஆராயத் தொடங்கியுள்ளது. டெல்லி தகவல்கள் படி, பிரச்சாரம் உள்ளிட்ட நிகழ்ச்சியில் ஏற்பட்ட பெரும் கூட்டம் திரண்ட நிலையில் அது விஜய்யின் புகழ் தெளிவாக காட்டியது., இது அவருக்கு அரசியல் முன்னேற்ற பாதையை திறக்கலாம் எனக் கருதப்படுகிறது. அதே சமயம், பாஜகவின் உயர்மட்ட நிர்வாகிகள், தமிழக தேர்தல் முன்னிட்டு தவெக தலைமையுடன் கூட்டணி ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகளை உருவாக்க தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
விஜய் வாக்கு வங்கி
அதிமுகவின் வாக்கு வங்கி குறைய வாய்ப்பு, தவெகவின் வேகமாக முன்னேறக்கூடிய சூழல், மற்றும் விஜய்யின் பிரபல தன்மை ஆகியவை பாஜக கவனத்திற்கு வந்ததன் அடிப்படையில், பாஜக தனது நடவடிக்கைகளை மாற்றி திட்டமிட்டு வருகிறது. மேலும், ஆதவ் அர்ஜுனாவின் டெல்லி பயணம் மற்றும் ஒரு மூத்த தவெக தலைவர் டெல்லியை தொடர்பு கொண்ட நிகழ்வு ஆகியவை, தவெக-பாஜக கூட்டணி உருவாகும் வாய்ப்புக்களை அதிகரிக்கும் சாத்தியக்கூறுகளை உருவாக்கியுள்ளது.
அரசியல் சூழல்
இத்துடன், கரூர் சம்பவம் மற்றும் அதன்பின்னர் ஏற்பட்ட அரசியல் நடவடிக்கைகள் தமிழக அரசியல் மேடையில் புதிய பரபரப்பையும் மாற்றத்தையும் உண்டாக்கியுள்ளது. வரவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர், இந்த சம்பவம் தவெக மற்றும் பாஜக இடையேயான அரசியல் கூட்டணி முடிவில், முக்கிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
பாஜக கூட்டணி
தமிழகத்தைப் பொறுத்தவரை அதிமுக திமுக தான் என்ற நிலையை மாற்றவே விஜய் விரும்புகிறார். இதற்காக பாஜகவின் துணை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறார். மேலும் தமிழக வெற்றி கழகம் தமிழகத்தில் மட்டுமே அரசியல் செய்யும் நிலையில் தேசிய கட்சியான பாஜகவோடு இணக்கமான உறவை பேணலாம் எனவும் சிலர் விஜய்க்கு அறிவுரை கூறியுள்ளனர். அரசியல் எதிரியை வீழ்த்த கொள்கை எதிரியுடன் கூட்டணி சேரவும் விஜய் தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications