கரூர் கூட்ட நெரிசலில் சதி.. பரபரப்பை கிளப்பிய தாடி பாலாஜி! விஜய் மன உளைச்சலில் இருக்கிறாராம்!
சென்னை: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் ஒரு துரதிர்ஷ்டவசமான விபத்து, ஆனால் அதன் பின்னணியில் ஒரு திட்டமிட்ட சதி இருக்கலாம் எனவும், மேலும், அங்கு காவல்துறையின் பாதுகாப்பும் போதுமானதாக இல்லை
தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினரும், நடிகருமான தாடி பாலாஜி நெல்லையில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
நடிகர் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஆன விஜய் கரூரில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி பிரச்சாரம் மேற்கொண்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசல் சிக்கி 41 பேர் பலியாகினர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் தற்போது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த சம்பவத்தில் சதி இருப்பதாக தமிழக வெற்றி கழகத்தினர் கூறி வருகின்றனர். மேலும் தாங்கள் கேட்ட இடத்தை விட குறுகலான இடம் ஒதுக்கப்பட்டதாகவும் அதன் காரணமாகவே நெரிசல் ஏற்பட்டு மரணங்கள் ஏற்பட்டதாக புகார் கூறுகின்றனர்.

விஜய் கூட்ட நெரிசல்
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களை வீடியோ கால் மூலம் சந்தித்த விஜய், விரைவில் அவர்களை நேரில் சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது, இதற்கிடையே கரூர் சம்பவத்திற்கு பிறகு விஜய் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாகவும் இந்த சம்பவத்திற்கு பின் சதி இருக்கலாம் என கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் நடிகர் தாடி பாலாஜி. நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், "கரூர் சம்பவத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் தலைவர் விஜய்க்கு மிகுந்தா மன வருத்தத்தை அளித்துள்ளது. அவர் மிகவும் மன உளைச்சலில் இருக்கிறார்.
தாடி பாலாஜி
நான் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தேன். இது தலைவருக்கு தெரியாமல் நடந்த ஒரு நிகழ்வு, இதில் அவர் என்ன செய்ய முடியும்?' என்று அவர்களே கூறினார்கள். தலைவர் விஜய், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் காணொளி காட்சி மூலம் பேசி ஆறுதல் கூறியுள்ளார். அவருக்கு சிறிது கால அவகாசம் தேவைப்படுகிறது. விரைவில் அவர் அவர்களை நேரில் சந்திப்பார். கரூர் போன்ற ஒரு குறுகலான இடத்தில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது தலைவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
கூட்ட நெரிசல் சதி
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தான் இடத்தின் தன்மை மற்றும் மக்கள் கூட்டம் குறித்து தலைவரிடம் தெரிவித்திருக்க வேண்டும். இது ஒரு விபத்தாக இருந்தாலும், இதன் பின்னணியில் தலைவர் மீது பழி சுமத்தும் நோக்கில் ஏதேனும் சதி நடந்திருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது. மேலும், அங்கு காவல்துறையின் பாதுகாப்பும் போதுமானதாக இல்லை. தலைவர் விஜய் இந்த சம்பவம் குறித்து பேசினால், அது மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தும்.
த.வெ.க. தலைவர் விஜய்
விரைவில் அவர் பத்திரிகையாளர்களை சந்தித்து, கரூர் சம்பவம் தொடர்பான பல மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிப்படுத்துவார் என்று நான் நம்புகிறேன். தலைமைக்கும், தலைவருக்கும் உண்மையாகவும், விசுவாசமாகவும் இருப்பவர்களே பதவிகளுக்கு வர வேண்டும். பதவியை பெற்றுக் கொண்டு செயல்படாமல் இருக்கக் கூடாது, உண்மையாக உழைக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.












Click it and Unblock the Notifications