கரூர் கணக்கை முடிக்காமல் விடமாட்டோம்! லண்டன் போய் செட்டிலாகுங்க ஸ்டாலின்! ஆதவ் அட்டாக்
சென்னை: கரூர் கூட்ட நெரிசலை ஏற்படுத்தி அப்பாவி மக்கள் பலியாக திமுக காரணமாக இருந்தது. அந்த கணக்கை தவெக முடிக்காமல் விடாது என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், வளர்மதி (திருச்சி), ஆனந்தன் உள்ளிட்டோர் தலைமையில் 10 ஆயிரம் பேர் தவெகவில் இணையும் நிகழ்வு இன்று மாமல்லபுரத்தில் நடந்தது.

அப்போது அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், கரூரில் தவெகவிற்கு ஒரு கணக்கு உள்ளது. அந்த கணக்கை முடிக்காமல் தவெக விடாது. கரூர் சம்பவத்தின் அனைத்து உண்மைகளும் வெளியே வரும்.
கரூரில் காவல் துறையினரை வைத்து கூட்ட நெரிசலை ஏற்படுத்தி அப்பாவி மக்களை கொன்று குவித்தார்கள். கரூரில் கூட்ட நெரிசலை ஏற்படுத்தியது திமுகவின் திட்டமிட்ட சதி!
மீண்டும் கூட்ட நெரிசலை உருவாக்க திமுக முயன்றதால்தான் விஜய் பிரச்சாரங்களுக்கு செல்லவில்லை. கடலூருக்கும் அவர் செல்லவிருந்த நிலையில் அதை ரத்து செய்தோம். திமுக ஆட்சியில் 14 மாவட்டங்களில் விஜய் பங்கேற்கும் கூட்டங்களில் நெரிசலை உருவாக்க சதி திட்டம் தீட்டப்பட்டிருந்தது.
கரூர் மக்கள் கண்ணீரின் பாவம்தான் கொளத்தூரில் ஸ்டாலின் தோற்றார். முன்னாள் முதல்வர் கருணாநிதி குடும்பத்தின் கடைசி முதல்வர் ஸ்டாலின்தான். தவெக ஆட்சியில் இனி யாருடைய தலையீடும் இருக்காது.
சட்டசபையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை அசிங்கப்படுத்திய திமுகவினருடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடிக்க எடப்பாடி பழனிசாமியும் அவரது மகன் மிதுனும் முயற்சித்தது அதிமுகவினருக்கு பிடிக்கவில்லை, அதனால் அதிமுகவில் இருந்து பலர் விலகி தவெகவுக்கு வந்துவிட்டார்கள்.
அதிமுகவில் 99 சதவீதம் பேர் தவெகவுக்கு வருவார்கள். அங்கு எடப்பாடியும் அவரது மகனும் மட்டும்தான் இருப்பார்கள். ஓபிஎஸ்ஸாவது கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்துவிட்டார். அவரை துரோகி என சொன்ன எடப்பாடி பழனிசாமி அதிமுகவையே திமுகவிடம் அடமானம் வைக்க முடிவு செய்திருந்தார்.
திமுகவும் அதிமுகவும் இணைந்து உள்ளாட்சி தேர்தல் அல்லது லோக்சபா தேர்தலில் கூட்டணியை அறிவிக்க போகிறார்கள். கரூர் சம்பவத்தில் எங்கே உண்மை வெளியே வந்துவிடுமோ என்ற அச்சத்தில் தவெக எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க திமுக முடிவு செய்துவிட்டது. தவெக எம்எல்ஏவுக்கு போனை போட்டதுமே அவர் போலீஸுக்கு போன் போட்டுவிட்டார்.
இனி ஸ்டாலினுக்கு இங்கு வேலையில்லை. அவர் குடும்பத்தினருடன் லண்டனில் போய் செட்டிலாகிவிடட்டும் என ஆதவ் அர்ஜுனா கொந்தளிப்புடன் பேசினார்.













Click it and Unblock the Notifications