அதிமுகவில் இருந்து சாரசாரையாக விலகும் நிர்வாகிகள்.. லீமா ரோஸ் தந்த ரியாக்சன்

Subscribe to Oneindia Tamil

கோவை: எஸ்பி வேலுமணி, சி விஜயபாஸ்கர், சிவி சண்முகம் தலைமையில் தவெகவை ஆதரித்த 25 எம்எல்ஏக்களில் லீமா ரோஸ் எம்எல்ஏவும் ஒருவர். பின்னாளில் மன்னிப்பு கடிதம் கொடுத்து இதில் 21 பேரும் இணைந்தனர்.. ஆனால் அண்மை காலத்தில் சேர்ந்த எம்எல்ஏக்களும் கூட ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைவது சலசலப்பை அதிகரித்துள்ளது. இதற்கு லீமா ரோஸ் கொடுத்த ரியாக்சனை பார்ப்போம்.

108 தொகுதிகளில் வென்ற விஜய் தலைமையிலான த.வெ.க., தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்று இருந்த காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்திருக்கிறது. அதே நேரம் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.எல். ஏ.க்கள் அடுத்தடுத்து தங்களது எம்.எல்.ஏ.க்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்து வருகிறார்கள்.

Office bearers leaving AIADMK in droves Leema Rose s reaction

இதுபற்றி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், குதிரை பேரம் நடத்துவதாக த.வெ.க. மீது குற்றம் சாட்டி வருகிறார். மறுபுறம் கட்சி மற்றும் திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், பெரும்பான்மை இல்லாமல் த.வெ.க. அரசு நடைபெறுகிறது. எனவே தமிழகத்துக்கு எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம் என்று கூறி வருகிறார்.

இதுவரையில் ஏராளமானோர் அதிமுகவில் இணைந்துள்ளனர். இந்நிலையில் அ.தி.மு.க.வில் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு அக்கட்சியில் இருந்து டாக்டர் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தங்கள் ஆதரவாளர்களுடன் த.வெ.க.வில் இன்று இணைந்துள்ளனர். சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் இணைப்பு விழா நடந்து முடிந்துள்ளது.. கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 200 பஸ்கள், 600 கார்கள் மூலம் 15 ஆயிரம் நிர்வாகிகள் த.வெ.க.வில் இணைந்துள்ளனர்.

முன்னாள் அமைச்சர்கள் டாக்டர் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோருடன் திருச்சியை சேர்ந்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.வளர்மதி, திருப்பூரை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மான்ராஜ் (ஸ்ரீவில்லிபுத்தூர்), எம்.ராம்குமார் (கும்பகோணம்), ராஜவர்மன் (திருச்சுழி), சதன்பிரபாகர் (பரமக்குடி), திருஞானசம்பந்தம் (பேராவூரணி), மாவட்ட செயலாளர்கள் பி.கே.வைரமுத்து (புதுக் கோட்டை), இளம்பை தமிழ்செல்வன் (பெரம்பலூர்), ஒரத்தநாடு மா.சேகர் (தஞ்சை), சீனிவாசன் (திருச்சி) உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும், 208 ஒன்றிய செயலாளர்களும் த.வெ.க.வில் இணைந்துள்ளனர்.

இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள அதிமுக, அடுத்த கட்சி MLA-க்களை வலைவீசி குதிரை பேரம் பேசி இழுப்பதற்கும், "கல்லாப்பெட்டி கூட்டணி" என்று தேர்தலுக்கு முன் சொன்ன கட்சிகளை எல்லாம் தங்கள் "Sofa கூட்டணி"க்குள் நுழைப்பதற்கும் முயற்சி செய்யும் பொய்க்கால் குதிரை அரசு சட்டம் ஒழுங்கை காப்பதற்கு ஏதேனும் முயற்சியாவது செய்யுமா?" என்று கேள்வி எழுப்பி உள்ளது. மறுபுறம் தேர்தல் ஆணையத்திலும்குதிரை பேரம் நடப்பதாக குற்றம்சாட்டி புகார் அளித்துள்ளனர். ஏற்கனவே ஆளுநரிடம் குதிரை பேரம் நடந்து வருவதாக புகார் அளித்து வருகிறது.

இந்த சூழலில், இதுபற்றி செய்தியாளர்கள், அதிமுகவின் லால்குடி தொகுதி எம்எல்ஏ லீமா ரோஸிடம் கேட்டனர். அதற்கு அவர் எல்லாமே தலைவர் எடப்பாடி அண்ணன் பார்த்துப்பார். அவர் கூறுவார்.. தலைவர் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார். விரைவில் நல்ல முடிவு எடுப்பார் என்று லீமா ரோஸ் எம்எல்ஏ கூறினார்...

எஸ்பி வேலுமணி, சி விஜயபாஸ்கர், சிவி சண்முகம் தலைமையில் தவெகவை ஆதரித்த 25 எம்எல்ஏக்களில் லீமா ரோஸ் எம்எல்ஏவும் ஒருவர். பின்னாளில் மன்னிப்பு கடிதம் கொடுத்து இதில் 21 பேரும் இணைந்தனர்.. ஆனால் அண்மை காலத்தில் சேர்ந்த எம்எல்ஏக்களும் கூட ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைவது சலசலப்பை அதிகரித்துள்ளது. எஸ்பி வேலுமணி , சிவி சண்முகம் ஆகியோர் மிக அமைதியாக இருக்கிறார்கள். விரைவில் ஏதேனும் பெரிய மாற்றங்கள் வரலாம் என்கிறார்கள் அவர்களது ஆதரவாளர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+