Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கவர்ச்சித்திமிர்! பண்ணையார்கள் கூட இப்படியொரு அருவருப்பை செய்ததில்லை.. விஜய்யை விளாசிய வன்னி அரசு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை பனையூருக்கு பக்கத்தில் மாமல்லபுரத்துக்கு அழைத்து நிதி கொடுத்து அரசியல் செய்வது அருவருப்பின் உச்சம். விஜயின் உறவினர்களோ உடல் நலமில்லாமல் மரணித்தால், உடலை பனையூருக்கு தூக்கி வரச்சொல்லி அஞ்சலி செலுத்துவாரா? என்னவிதமான மனநிலை இது? பண்ணையார்கள் கூட இந்த அருவருப்பை செய்ததில்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி துணைப்பொதுச் செயலாளர் வன்னி அரசு விமர்சனம் செய்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கடந்த மாதம் 27 ஆம் தேதி கரூர் வேலுசாமிபுரத்தில் பிரசாரம் மேற்கொண்டார். இதில் கூட்டநெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். 110 பேர் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

Vanni Arasu TVK Vijay Chennai

விஜய் சந்திப்பு

பாதிக்கப்பட்ட 41 குடும்பத்தினரிடமும் வீடியோ காலில் பேசிய விஜய் விரைவில் உங்களை சந்திக்கிறேன் என்று சொல்லியிருந்தார். இந்த நிலையில் கரூரில் வந்து பார்க்க முடியாததால், 41 பேர் குடும்பத்தினரையும் பஸ்சில் அழைத்து சென்று சென்னை மாமல்லபுத்தில் வைத்து இன்று சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது விஜய் அவர்களிடம் மன்னிப்பு கேட்டதாகவும், கடைசி வரை உங்களுடன் இருப்பேன் என்று அவர் கூறியதாகவும் தகவல்கள் வெளியாகின.

வன்னி அரசு விமர்சனம்

இதற்கிடையே பாதிக்கப்பட்டவர்களை அவர்களது வீடுகளுக்கு சென்று பார்க்காமல், சென்னைக்கு அழைத்து சந்திப்பது என்ன மாதிரியான அரசியல் என்று பலரும் விஜய்யை விமர்சனம் செய்து வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை பனையூருக்கு பக்கத்தில் மாமல்லபுரத்துக்கு அழைத்து நிதி கொடுத்து அரசியல் செய்வது அருவருப்பின் உச்சம் என்றும் ஜனநாயகன் என படம் மட்டும் எடுத்தால் போதுமா? உண்மையான ஜனநாயகனாக செயல்பட வேண்டாமா? என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி துணைப்பொதுச் செயலாளர் வன்னி அரசு விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

இது அரசியலில் புதுசு

கடந்த செப் 27 அன்று கரூரில் நடிகர் விஜய் அவர்களை காண வந்த ரசிகர்கள் 41 பேர் மரணித்த கொடுந்துயரத்தை கண்டும் காணாமல் ஓடி பதுங்கிய 'ஹீரோ', சரியாக ஒரு மாதம் கழித்து இன்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்திக்கிறார். Sorry பாதிக்கப்பட்ட மக்கள் ஹீரோவை சந்திக்கின்றனர் இது அரசியலில் புதுசு.

இதுவரை, இச்சமூக கட்டமைப்பில் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது இறந்து போனவர்களின் வீடுகளுக்கு தான் உறவினர்களோ, தலைவர்களோ தேடிப்போய் ஆறுதல் கூறியது மரபாக இருந்து வந்தது. அதுவே வெகு மக்களின் 'ஏற்பிசை'வாகவும் இருந்தது. ஆனால், 'சினிமா ஹீரோ' கட்சி ஆரம்பித்ததும் எல்லா காட்சிகளுமே சினிமா காட்சிகளாக மாற்றுகிறார்கள்.

இப்போது கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை பனையூருக்கு பக்கத்தில் மாமல்லபுரத்துக்கு அழைத்து நிதி கொடுத்து அரசியல் செய்வது அருவருப்பின் உச்சம். இனி விஜய் ரசிகர்களோ அல்லது விஜயின் உறவினர்களோ உடல் நலமில்லாமல் மரணித்தால், உடலை பனையூருக்கு தூக்கி வரச்சொல்லி அஞ்சலி செலுத்துவாரா? என்னவிதமான மனநிலை இது? நிலவுடமையாளர்களோ பண்ணையார்களோ கூட இந்த அருவருப்பை செய்ததில்லை.

கவர்ச்சித்திமிர் இல்லையா?

ஆனால் நடிகர் விஜய் செய்வதற்கான ஆணவம் எங்கிருந்து வந்தது? 20 லட்சத்தை தூக்கிப்போட்டால் மண்டியிட்டு வாங்கிக்கொள்வார்கள் என்னும் பண்ணைத்தனமா? இதைவிட யாராவது மக்களை அவமதிக்க முடியுமா? சினிமா ஹீரோவாக இருப்பதால் கதை சொல்லும் இயக்குனரிலிருந்து தயாரிப்பாளர் வரை வீடு தேடி வருவதைப்போல, மக்களையும் அப்படி மாற்றுவது கவர்ச்சித்திமிர் இல்லையா?

இது ஜனநாயகத்துக்கு எதிரான அயோக்கியத்தனம் இல்லையா? ஜனநாயகன் என படம் மட்டும் எடுத்தால் போதுமா? உண்மையான ஜனநாயகனாக செயல்பட வேண்டாமா? நுகர்வு கலாச்சாரத்தில் டிபார்ட்மென்ட் ஸ்டோரை நோக்கி மக்களை நகர்த்தியது போல, ஜனநாயகத்திலிருந்து சர்வாதிகாரத்துக்கு நகர்த்தும் மக்கள் விரோத அரசியலையே செய்து வருகிறார் சினிமா ஹீரோ விஜய். இது ஹீரோத்தனம் இல்லை; வில்லத்தனம்.. என்று பதிவிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+